கவிழ்ந்து வங்கிக்குள் நுழைந்த பாரந்தூக்கி

பெரிய பல சக்கர பாரந்தூக்கி வாகனம் நேற்று காலை நேரத்தில் உட்லண்ட்சில் ஒரு வங்கிக் கிளை அலுவலகத்துக்குள் விழுந்து விட்டது. அந்த வாகனத்தை ஓட்டிவந்த வர் அதை திருப்பி ஓட்டியபோது வாகனம் கட்டுப்பாடை மீறிவிட்டது. ஓட்டுநருக்கு காயம் இல்லை, தப்பிவிட்டார் என்று சம்பவ இடத்தில் இருந்த போலிசார் தெரிவித்தனர். வாகனத்துக்கு அடியில் ஒரு மோட்டார் சைக்கிள் காணப் பட்டது. என்றாலும் யாருக்கும் காயம் எதுவுமில்லை.

2A உட்லண்ட்ஸ் செண்டர் ரோட்டில் அமைந்துள்ள பிஓஎஸ்பி கிளைக்குள் அந்த வாகனம் சாய்ந்து விழுந்துவிட்டது. காலை 7 மணிக்கு சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் கட்டடத்தின் மேல் தளங்களில் வசிப்போருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் போலிஸ் குறிப்பிட்டது. அந்த விபத்து பற்றி காலை சுமார் 7 மணிக்கு தனக்குத் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடி மைத் தற்காப்புப் படை தெரிவித்தது. உடனே அது தீயணைப்பு வாகனத்தையும் மருத்துவ வண்டியையும் அங்கு அனுப்பியது.

உட்லண்ட்சில் பிஓஎஸ்பி கிளை அலுவலகத்தை துளைத்துக்கொண்டு விழுந்து கிடக்கும் பாரந்தூக்கி வாகனம். வாகன ஓட்டுநர் கட்டுப் பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. வங்கி திறப்பதற்கு முன் காலை 7 மணிக்கு விபத்து நிகழ்ந்ததால் யாருக்கும் காயம் இல்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!