மருத்துவம் தொடர்பான வழக்குகளில் புதிய திட்டங்கள்

மருத்­து­வச் செல­வு­கள், அதன் தொடர்­பிலான உயர்ந்த காப்­பு­று­திச் செல­வு­களைத் தவிர்க்­கும் வகையில் மருத்­து­வம் தொடர்­பான வழக்­கு­களில் புதிய திட்­டங்களை தலைமை நீதிபதி சுந்த­ரேஷ் மேனன் நேற்று அறி­வித்­தார். 2016 சட்ட ஆண்டை நேற்றுக் காலை தொடங்கி வைத்து உரை யாற்றிய திரு சுந்த­ரேஷ், தற்போது உள்ள நடை­முறை­களுக்கு மாற்றாக மூன்று புதிய நடை­முறை­கள் பற்றி பேசினார்.

சர்ச்சை­களுக்­குத் தீர்வுகாண சம­ர­சப் பேச்சுவார்த்தையை முதற்படி­யா­கப் பயன்­படுத்­து­தல்; மருத் துவம் தொடர்­பான வழக்­கு­களில் நீதி­ப­தி­யின் ஆலோசனை கேட்டுச் செயல்­படு­தல்; மருத்­து­வத் ­துறை மதிப்­பீட்­டா­ளர்­களுடைய ஆலோசனையின் உதவி­யு­டன் நீதிபதி தீர்ப்பளித்தல் ஆகி­யவையே அந்த மூன்று திட்­டங்கள். இதற்­காக, சிங்கப்­பூர் மருத்­துவமன்றத்­தால் நிய­மிக்­கப்­படும் மூத்த மருத்­து­வர்­களைக் கொண்ட மருத்துவத்துறை மதிப்­பீட்­டா­ளர்­கள் குழு அமைக்­கப்­படும்.

மேலும், உயர் நீதி­மன்றத்­தி­லும் அரசு நீதி­மன்றங்களி­லும் இது போன்ற வழக்­கு­களைக்கையாள சிறப்பு நீதி­ப­தி­கள் குழு உருவாக்கப்­படும். இதன் தொடர்­பில் சிங்கப்பூர் நீதித்­துறை கல்லூரி, சிங்கப்பூர் மருத்­துவமன்றத்­து­டன் இணைந்து நீதி­ப­தி­களுக்­கும் மதிப்­பீட்­டா­ளர்­களுக்­கும் தகுந்த பயிற்­சியை அளிக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!