எண்ணெய் விலை கடும் இறக் கம், நிதிச் சந்தை ஏற்றஇறக் கம் காரணமாக சிங்கப்பூர் பொருளியல் வாய்ப்புகள் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே பிரகாசமாக இல்லை என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. என்றாலும் இந்த ஆண்டில் பொருளியல் 1-=3% வரை வளரும் என்று தான் முன் னுரைத்ததில் மாற்றம் இல்லை என்றும் அமைச்சு நேற்று குறிப் பிட்டது. இந்த ஆண்டில் உலகப் பொருளியல் படிப்படியாக மீட்சி அடையும் என்று அமைச்சு தெரிவித்தது. இருந்தாலும் தயாரிப்புத்துறை பலவீனமாகவே இருக்கும் என்று அது முன் னுரத்துள்ளது.
சிங்கப்பூர் பொருளியலில் ஐந்தில் ஒரு பங்குக்குப் பொறுப்பு வகிக்கும் இந்தத் துறை, ஏற்றுமதிக்குத் தேவை குறைவு ஏற்பட்டுவிட்ட தால் பாதிப்பு அடைந்துள்ளது. சீனாவின் பொருளியல் மெதுவடைந்துவிட்டது. சீனா விலும் அமெரிக்காவிலும் இருக்கும் நிறுவனங்கள் ஆசியாவில் இருந்து தயாரிப்புப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே வேலைகளை முடித்துக்கொள் கின்றன. இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிய அமைச்சு, சிங்கப்பூர் பொருளியல் சென்ற 2015ல் 2% வளர்ந்தது என்று குறிப்பிட்டது.