4,170 வீடுகளுக்கான திட்டம் துவக்கம்

புக்கிட் பாத்தோக், செங்காங், பிடாடரி ஆகிய பகுதிகளில் அமையவிருக்கும் பிடிஓ வீடுகளுக்கு மார்ச் 1 வரை விண்ணப்பிக்கலாம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதிய 4,170 பிடிஓ வீடுகளுக்கான விற்பனை நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. புக்கிட் பாத்தோக், செங்காங், பிடாடரி ஆகிய பகுதிகளில் அமையவிருக்கும் இந்த வீடுகள் ஈரறை ஃபிளெக்ஸி முதல் மூன் றாம் தலைமுறை வீடுகள் வரை யில் பல்வேறு வடிவங்களில் உரு வாகும்.

இந்த மூன்று இடங்களிலும் கட்டப்படவிருக்கும் வீடுகள் தொடர்பான விரிவான தகவல் களை நேற்று கழகம் அறிவித்தது. தோ பாயோவில் உள்ள முதிர்ச் சியடைந்த பேட்டையான பிடாடரி யில் ஆல்காஃப் ஓயசிஸ் என்ற திட்டத்தின்கீழ் 1,594 வீடுகள் கட்டப்படும். முதிர்ச்சியடையாத நகரங் களில் கட்டப்படவிருக்கும் 1,655 வீடுகள் வெஸ்ட் பிளேன்ஸ்@ புக்கிட் பாத்தோக் என்ற பெயரி லான திட்டத்தின்கீழ் கட்டப்படும். மூன்றாவதாக, செங்காங்கில் ஆங்கர்வேல் பிளேன்ஸ் என்ற திட்டத்தின்கீழ் 921 வீடுகள் கட் டப்படும்.

இந்த வீடுகளின் விலைகள் உதவிமானியம் தவிர்த்து 85,000 வெள்ளி முதல் 553,000 வெள்ளி வரையில் விற்பனைக்கு வந்து உள்ளன. இவற்றை வாங்க விரும்புவோர் கழகத்தின் இணையப்பக்கத்தில் வருகிற மார்ச் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கழகத்தின் மைய அலுவலகத்திலும் கிளை அலுவலகங்களிலும் நேரடியாகச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

புதிய பிடிஓ திட்டங்களின் மாதிரி ஓவியம். இடப்புறம் ஆல்காஃப் ஓயசிஸ் (பிடாடரி), வலப்புறம் மேல் ஆங்கர்வேல் பிளேன்ஸ் (செங்காங்), அதன் கீழ் வெஸ்ட் பிளேன்ஸ் (புக்கிட் பாத்தோக்). வரைபடம்: வீவக

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!