தெம்பனிஸ் அபார வெற்றி

ஆசிய காற்பந்து கிண்ணப் போட்டியில் பங்ளாதே‌ஷின் ஷேக் ஜமால் தன்மோண்டி குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் தெம் பனிஸ் ரோவர்ஸ் குழு பந்தாடியது. இதுவே இந்தப் போட்டியில் தெம்பனிஸ் பதிவு செய்திருக்கும் ஆகப் பெரிய வெற்றியாகும். இந்த வெற்றி மூலம் பட்டியலின் முதல் இடத்துக்கு தெம்பனிஸ் முன்னேறி உள்ளது. ஜாலான் புசார் விளையாட் டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தைக் காண 2,378 ரசிகர்கள் கூடினர். தெம்பனிஸ் குழுவின் நட்சத்திர வீரர் ஜெர்மேன் பென்னண்ட் கோல் போடாவில்லை என்ற போதிலும் தமது அணியின் நான்கு கோல்களுக்கும் அவர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் தொடங்கி 66 வினாடிகளில் பென்னண்ட் அனுப் பிய பந்தை பில்லி மெஹ்மட் கோலாக்கினார். ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் புகுந்த தெம்ப னிசின் இரண்டாவது கோலுக்கும் அவர் காரணமாக இருந்தார்.

அவர் அனுப்பிய பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் சேர்த்தார் ஹஃபிஸ் அபு சுஜாட். அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு கோல்களை பென்னண்ட் வடிவமைத்தார். 52வது நிமிடத்தில் அஃபிக் யூனோஸ் போட்டார். ஒரு நிமிடம் கழித்து, பென்னண்ட் அனுப்பிய பந்தைத் தமது சொந்த வலைக்குள் சேர்த்து சொந்த கோல் போட்டார் ஷேக் ஜமால் குழுவின் தோபு பார்மன். தமது முதல் ஆசிய காற்பந்து கிண்ணப் போட்டி வெற்றியைப் பதிவு செய்தது குறித்து தெம்பனிஸ் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்தார். "இது நல்லதோர் ஆரம்பம். அதிலும் நாங்கள் ஒரு கோல்கூட விடவில்லை. ஆனால் எங்களால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். கோல் போட கிடைக்கும் வாய்ப்புகளைப் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்," என்றார் சுந்தரம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!