கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது அவரது வலைப் பதிவில் தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் போலிசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்று போலிஸ் அதிகாரிகள் நேற்று திரு மகாதீரின் அலுவலகத்திற்குச் சென்றிருந்ததாகவும் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய போலிசார் அரை மணி நேரம் செலவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த விசாரணையின்போது ஐந்து வழக்கறிஞர்கள் திரு மகாதீருடன் இருந்ததாகத் தெரிகிறது. தமது வலைப்பதிவில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலிசார் பல கேள்விகளைக் கேட்டதாகவும் ஆனால் தான் எந்தக் கேள்விக்கும் பதில் கூறவில்லை என்றும் திரு மகாதீர் கூறினார். "என் மீது குற்றம் சாட்டப்பட்டால் நீதிமன்றத்தில் அக்குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பேன் என்று போலிசாரிடம் கூறினேன்," என்று மகாதீர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மகாதீரின் வாக்குமூலத்தை போலிசார் பதிவு செய்தனர்
25 Feb 2016 07:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2016 07:47

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!