நேப்பாள விமான விபத்தில் 23 பேர் மரணம்

காட்மாண்டு: நேப்பாளத்தில் நேற்று மாயமாய் மறைந்த பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் ஆனந்தா பிரசாத் போகரல் உறுதிப்படுத்தியுள்ளார். நேப்பாளத்தின் மேற்கு மலைப்பகுதியில் அந்த விமானத் தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்திருப் பதாகவும் அவர் சொன்னார். விமானத்தின் சிதைந்த பாகங்கள் எரிந்து கருகிய நிலையில் காணப்பட்டதாகவும் அந்த விமானத்தில் சென்ற 23 பேரும் விபத்தில் பலியானதாகவும் அவர் கூறினார்.

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் உடல்கள் சிதறிக் கிடப்பதாகவும் ஆனால் இதுவரை எந்த உடலும் அடையாளம் காணப்படவில்லை என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்திருப்பதாக வும் அமைச்சர் கூறினார். மோசமான பருவநிலை காரணமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப் படுகிறது. நேப்பாளத்தில் மேற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானம் காணாமல்போன தாகவும் அந்த விமானத்தில் 3 விமான சிப்பந்திகளும் 20 பயணிகளும் இருந்ததாகவும் முன்னதாக அதிகாரிகள் கூறினர்.

விபத்து பற்றி அறிந்ததும் கதறி அழும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!