சிங்கே அணிவகுப்பு 2024 முன்னோட்டத்தில் கண்கவரும் நிகழ்ச்சிகள்
9 Feb 2024 16:47
கடல்நாக உருவபொம்மையை கொண்டு வரும்போது நெருப்பு வித்தை காட்சி. (அனைத்து படங்கள்: டினேஷ் குமார், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
கடல்நாக மிதக்கும் மேடையில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங்.
சறுக்கு சக்கரங்களில் சிறுவர்கள்.
“பெட்டல்ஸ் ஆப் பஷ்சன்” எனப்படும் உயர்த்திய மிதக்கும் மேடையில் கலைஞர் ஒருவர்.
பல இனத்தவர்களின் கலாசாரத்தை பிரதிநிதித்து வண்ண ஆடைகளை அணிந்த கலைஞர்கள்.
பிரேசில் நாட்டின் கலாசாரத்தை உணர்த்தும் வழியில் ஆடைகள் உடுத்தி மகிழ்ச்சியாக ஆடும் கலைஞர்கள்.
சிங்கே முன்னோட்ட அணிவகுப்பை ஆர்வத்துடன் காணும் மாணவர்கள்.
சூரியகாந்தி பூ வடிவில் தலை அணிகலனை அணிந்து நடனமாடி செல்லும் கலைஞர்கள்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
கடல்நாக ஆண்டை வரவேற்பதற்காக சிங்கப்பூரில் காணப்படும் சீனப் புத்தாண்டு வண்ண அலங்காரங்கள்
7 Feb 2024 19:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2024 19:58
18 மீட்டர் உயரத்தில் அதிர்ஷ்ட கடவுள், 140 மீட்டர் நீளத்தில் கடல்நாக விளக்குச் சிலைகள். (மேல் படம்)
வரும் பிப்ரவரி 10,11ஆம் தேதிகளில் நடைபெறும் சீனப் புத்தாண்டை வரவேற்க சிங்கப்பூர் தீவு முழுவதும் அலகாரங்கள், வண்ண விளக்குகள் ஆகியவற்றைப் பார்க்க மக்கள் திரண்டு வருகின்றனர். (அனைத்து படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
கரையோரப் பூந்தோட்டங்களில் பிரம்மாண்டமான “ரிவர் ஹங்பாவ் 2024 லன்டர்ன் லைட்-அப்” வண்ண விளக்குக் காட்சி பிப்ரவரி 8 முதல் 17 வரை நடைபெறவிருக்கிறது.
ரேஸ் கோர்ஸ் ரோட்டின் புளோக் 681ல் காணப்படும் சீனப் புத்தாண்டிற்கான அலங்காரங்கள்.
சைனாடவுனில் சீனப் புத்தாண்டு சந்தைக்குத் திரண்டு வரும் மக்கள்.
அதிர்ஷ்ட கடவுள் வேடமிட்டுள்ள கடைக்காரர்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
மனம் கவரும் பினாங்கு தைப்பூசம்
30 Jan 2024 18:39
உலகெங்கும் தைப்பூசம் தமிழர்களால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டாலும் பினாங்கு தீவில் பல இன மக்கள் தைப்பூசத்தைத் தங்கள் சொந்தத் திருவிழாவாகக் கொண்டாடுவது அதன் தனிச்சிறப்பாக உள்ளது.
கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பக்தர்கள், ஜனவரி 24,25ஆம் தேதிகளில் பங்கேற்றனர். 511 படிகளைக் கொண்ட தண்ணீர்மலைக் கோயில், 272 படிகள் கொண்டுள்ள பத்துமலையைக் காட்டிலும் அதிகமானவை.
தைப்பூசத்திற்கு முந்தைய நாளான செட்டி பூச தினத்தில் வீதி உலா மேற்கொண்ட தங்க, வெள்ளி ரதங்களைப் பொதுமக்கள் ஆவலுடன் வரவேற்றனர்.
படம்: கார்த்திக் அருள்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
மழை, வெயில் பாராமல் பக்தி பரவசத்துடன் சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா 2024
25 Jan 2024 18:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2024 18:44
சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் கிட்டத்தட்ட 12,000 பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
படம்: ஏஃப்பி
படம்: ஏஃப்பி
படம்: ஏஃப்பி
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: தமிழ் முரசு
தைப்பூச அன்னதானத்தில் உணவருந்திய பக்தர்கள். (படம்: தமிழ் முரசு)
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
உலகமெங்கும் 2024ஆம் ஆண்டு வாணவேடிக்கை, திருவிழாக்கள், ஆடல் பாடலுடன் பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்டது.
கென்யாவில் அமைந்துள்ள காகாமெகா நகரில் ஆயிரகணக்கான மக்கள் மலின்யா விளையாட்டு அரங்கத்தில் கூடி காளை மாட்டுச்சண்டையுடன் புத்தாண்டை தொடங்கினர்.
இந்தோனீசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் பேரங்காடியின் கூரைக்கு மேல் வண்ணமிக்க வாணவேடிக்கைக் காட்சியை மக்கள் கண்டுகளித்தனர்.
கங்கை, யமுனை ஆறுகள் இணையும் சங்கத்தின் அருகில் உள்ள கோவிலில் புத்தாண்டு நாளை கொண்டாடுவதற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பாடகர் மிக் ஜாகரை பிரதிபலிக்கும் ஒரு முகமூடியை அணிந்துகொண்டு இக்கலைஞர் லண்டனின் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.
டில்பர்க்கில் உள்ள பியூஷாவனில் பார்வையாளர்கள் வாணவேடிக்கைகளை ரசிக்கிறார்கள்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
26 Dec 2023 15:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Dec 2023 18:56
போலந்தின் வார்சாவில் உள்ள கோட்டை சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்.
போலந்தின் கீலனோகாவில் உள்ள செயிண்ட் உர்சுலா லெடோச்சோஸ்கா தேவாலயத்தில் ஒரு கிறிஸ்துமஸ் இயந்திர கண்காட்சி.
போலந்தின் வார்சாவில், கிறிஸ்துமஸ் தொடர்பான படங்கள் போலந்து நாடாளுமன்ற கட்டடத்தின் மேல் காட்சியளிக்கப்படுகிறது.
உக்ரேனின் கியேவ் அருகே உள்ள பைரோகோவோ கிராமத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது பாரம்பரிய கிறிஸ்துமஸ் அலங்காரம் முன் உக்ரேனியர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுகின்றனர்.
தனது தந்தையின் கைகளில் அமர்ந்தபடி 'பெத்லகேம் நட்சத்திரம்' கைவினை பொருளுடன் விளையாடுகிறாள் ஒரு சிறுமி.
இலங்கையின் கொழும்பில் சாலையோரத்தில் மின்னும் கிறிஸ்துமஸ் விளக்குகளும் அலங்காரங்களும்.
இலங்கையின் கொழும்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு நகர மண்டபம் அலங்கார விளக்குகள் மின்னுகின்றன.
இலங்கையின் கொழும்பில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் தொழிலாளர்கள்.
அகமதாபாத்தின் மணிநகர் மெதடிஸ்ட் தேவாலயத்தில் புகைப்படம் எடுக்கும் தம்பதியர்.
புதுடெல்லியில் கிறிஸ்துமஸ் அன்று மூடுபனியில் சைக்கிள் ஓட்டும் 'சாண்டா கிளாஸ்'.
அம்ரித்சர் நகரின் செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தில் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தனர்.
படம்: எ.ப்.பி, ராய்ட்டர்ஸ், ஈ.பி.எ
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
சிங்கப்பூரில் 2023 கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்
24 Dec 2023 17:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Dec 2023 15:53
'சிட்டி ஸ்குவேர்' பேரங்காடி. படங்கள்: ரவி சிங்காரம், டினேஷ் குமார்
மரினா பே சேண்ட்ஸ்
மரினா சதுக்கம்
ராஃபிள்ஸ் ப்டேஸ்
'விவோசிட்டி' கடைத்தொகுதி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
மெக்சிகோவில் இவ்வாண்டின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி
19 Dec 2023 19:14
மெக்சிகோ நகரில் விமர்சையாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருவிழா. படம்: ராய்ட்டர்ஸ்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
வெளிநாட்டு ஊழியர் தினம் 2023
18 Dec 2023 18:28
தொண்டூழியம் ஆற்றும் வெளிநாட்டு ஊழியர்களைச் சிறப்பிக்கும் வகையில் அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 17ஆம் தேதியன்று நடந்தேறியது. லிட்டில் இந்தியாவிலுள்ள பெர்ச் ரோடு திறந்த வெளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்காக ஏறத்தாழ 12,000 ஊழியர்கள் திரண்டனர். படம்: டினேஷ் குமார், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
சிங்கப்பூரின் செல்லக்குட்டி லெ லெ விடைபெறுகிறது
13 Dec 2023 18:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2023 19:57
பொதுமக்கள் லெ லெ பாண்டா கரடிக்குட்டிக்குப் பிரியாவிடை கொடுப்பதற்காக இன்று திரண்டு வந்தனர். சிங்கப்பூரில் பிறந்த செல்லக்குட்டியான லெ லெ, சீனாவிற்கு அடுத்த மாதம் திரும்புகிறது.
புகைப்படங்கள்: டினேஷ் குமார், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மண்டாய் வனவிலங்கு குழுமம்