சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் மீண்டும் திறப்பு: வாடிய முகங்கள் இப்போது மலர்கின்றன
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
இன்றைய தினம் (ஏப்ரல் 1) ஜோகூர் பாருவில் மனைவி நூர்ஃபிஃபியாஃபினாவுடன் மீண்டும் இணையும் ரோஸ்லான் ஹரோன், 43.
பிறந்து 11 மாதங்களான மகன் ரயீஸ் மீர்ஸா ரோஸ்லானை தூக்கி கொஞ்சும் ரோஸ்லான் ஹரோன், 43. தம்முடைய மகனை இவர் முதன்முறையாக சந்திக்கிறார்.
ஜோகூரைச் சேர்ந்த திரு லியோங், மலேசியாவுக்குத் திரும்ப முடிவதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறார். "ஈராண்டுகளாகிவிட்டன! இப்போது நான் மலேசியாவுக்குச் சுதந்திரமாக சென்றுவரலாம்" என்றார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் 39 வயது மலேசியரான திருமதி துபாங் ஈசா, ஜோகூர் பாருவில் உள்ள தம்முடைய குடும்பத்தாரைக் காண அங்கு மூன்று நாள்களுக்குச் செல்கிறார். தம்முடைய தாயார் இறப்பதற்கு முன்பு தம்மால் ஜோகூருக்குச் சென்று அவரைப் பார்க்க முடியவில்லை என்று இவர் கண்ணீர் மல்க கூறினார்.
நேற்று நள்ளிரவு சிங்கப்பூர்-மலேசிய எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் உட்லன்ட்ஸ் கடற்பாலத்தில் நடந்துசெல்லும் பயணிகள்.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு வெளியே உட்லண்ட்ஸ் சாலையில் நேற்று இரவு 11.20 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள்.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பேருந்தில் ஏறுவதற்காக காத்திருக்கும் பயணிகள்.
ஜோகூருக்குச் செல்வதற்காக உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச்சாவடிக்கு வெளியே காத்திருக்கும் பயணிகள்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
14 Feb 2022
27 Sep 2021