செய்திக்கொத்து

Sportsover 1 year ago

தடுப்பூசி போடாதோர் டென்னிஸ் பொதுவிருதில் விளையாடலாம்

மெல்பர்ன்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய பொதுவிருது டென்னிஸ் போட்டியில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத விளையாட்டாளர்களால் பங்கேற்கமுடியும் என்று பெண்கள் டென்னிஸ் சங்கம் அதன் விளையாட்டாளர்களிடம் சொன்னதாக அமெரிக்க ஊடகங்களுக்குக் கசிந்த மின்னஞ்சல் தெரிவித்துள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாத விளையாட்டாளர்கள் 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும்.

பெண்கள்,...

தமிழ்மொழி விழா 2026 மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது.

இளைய தலைமுறையும் தமிழும் - ஒளிமயமான எதிர்காலம்

Editorialabout 8 hours ago

தமிழ்மொழி கற்றல் என்பது உயர்கல்விக்குத் தகுதிபெறுவதற்காக, முக்கியத் தேர்வுகளில் மதிப்பெண் எடுக்கும் ஒரு கருவியாக மட்டுமே சுருங்கிப்போயுள்ளதாக ஒருபுறம் பலரும் பேசிவருகிறார்கள்.

அதே சமயத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் பலர் தமிழைச் சிறப்பாகக் கற்று முன்னேறி வருகின்றனர்.

உயர்தமிழ் பயில்வதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்தை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்துப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து...

கவிதை படைத்த 33 பேரில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மாணவர்கள் என கவிப்பெருக்கு 2026 நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

கவிப்பெருக்கு: புதுநடையில் சங்கப்பாடல்கள்

Communityabout 7 hours ago

சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதை, பொருள்வயிற் பிரிவின் வலிபேசும் கலித்தொகைப் பாடல் என, சங்ககாலக் கவிதைகளை உணர்ச்சிப் பெருக்குடன் வசன கவிதைகளாகப் படைத்தது கவிப்பெருக்கு.

வசனக்கவிதை எனும் தற்காலக் கவிதை முறையின்வழி இளைய தலைமுறையினரிடையே மொழியைக் கொண்டு சேர்க்கும் நோக்குடன் கவிப்பெருக்கு மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

நாற்காலி, திறன்பேசி, பேருந்து முதல் உணர்வுகள்வரை அன்றாடப் பயன்பாடுகளைக் கவிநயத்துடன்...

முரசு மேடை

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 2.5 என்ற அளவைக் கடந்துள்ளது.

தாய்லாந்தில் மோசமடைந்த தூசுமூட்டம்

Worldabout 7 hours ago

சியாங் மாய்: தாய்லாந்தின் சியாங் மாய் நகரைக் கடுமையான தூசுமூட்டம் மூடியுள்ளது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அங்கு 2.5 என்ற கடுமையான நிலையைக் கடந்துள்ளது.

சனிக்கிழமை 4ஆம் தேதி நிலவரப்படி மே ரிம் வட்டாரத்தில் உள்ள நக்கோர்ன்பிங் மருத்துவமனையில் ஒரு கனசதுர மீட்டருக்கு 409 மைக்ரோகிராம் என்ற அளவில் காற்றின் தரம் பதிவானது. அது மனித...

பகுதி மின்கடத்திகளைத் தயாரிக்க தைவான் திரவ இயற்கை எரிவாயுவை அதிகம் சார்ந்திருக்கிறது.

தைவானின் எரிசக்தி தேவைகளை நிறைவேற்ற உதவும் நாடுகள்: பொருளியல் அமைச்சர்

Worldabout 8 hours ago

தைப்பே: ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து அடுத்த சில மாதங்களுக்குத் தைவானுக்கு தொடர்ந்து திரவ இயற்கை எரிவாயு கிடைக்கும் என்று அந்நாட்டுப் பொருளியல் அமைச்சர் காங் மின் சின் தெரிவித்துள்ளார்.

ஈரான் போரால் மத்திய கிழக்கின் எரிசக்தி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தைவான் மாற்றுவழிகளில் விநியோகத்தை உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

பகுதி மின்கடத்திகளை உற்பத்தி செய்வதில் முக்கிய...

பிற்பகல் 2.10 மணியளவில் தீ குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

பொங்கோல் கூட்டுரிமை வீட்டில் தீ: மருத்துவமனையில் நால்வர்

Singaporeabout 9 hours ago

பொங்கோல் பார்க் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீட்டில் புகையைச் சுவாசித்ததற்காகச் சனிக்கிழமை (ஏப்ரல் 4) நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அந்த வீட்டில் மின்சாரக் கோளாற்றால் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.

ரிவர்வேல் லிங்கில் உள்ள கூட்டுரிமை வீட்டில் சம்பவம் குறித்துப் பிற்பகல் 2.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

சம்பவ...

மத்திய கிழக்கில் நிலவும் சிக்கலால் சிங்கப்பூரில் ஏற்படும் தாக்கத்தை ஆராயும் பணியைத் தொடங்கியது அமைச்சர்நிலைக் குழு: அமைச்சர் கா சண்முகம்
Play Video

ஏப்ரல் 2, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

லிட்டில் இந்தியா வர்த்தகங்களை மேம்படுத்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
Play Video

ஏப்ரல் 1, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா
Play Video