முனையம் 5 தயாரானதும் விமான நிலையத்தின் ஆற்றல் 50 விழுக்காட்டுக்கும் அதிகம் விரிவடையும் என்று தெரிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங், உலகளாவிய பயணம், வர்த்தகத்துக்குச் சிங்கப்பூர் தொடர்ந்து முக்கிய நுழைவாயிலாக இருப்பதை இது உறுதி செய்யும் எனக் குறிப்பிட்டார்.

சாங்கி விமான நிலையத்தை விரிவுபடுத்த கூடுதலாக $5 பில்லியன் ஒதுக்கீடு

Singaporeabout 1 year ago

சாங்கி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட நிதியில் கூடுதலாக $5 பில்லியன் நிரப்பப்படும் என்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறினார்.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 5க்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என்றார் அவர்.

முனையம் 5 தயாரானதும் விமான நிலையத்தின்...

சரக்குப் போக்குவரத்து நிறுவனமான டிஹெச்எல் எத்தனை ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது என்று தெரியவில்லை.

சிங்கப்பூரில் செயல்படும் டிஹெ‌ச்எல் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கை

Singapore3 minutes ago

சிங்கப்பூரில் செயல்படும் டிஹெச்எல் (DHL) நிறுவனப் பிரிவு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சரக்குப் போக்குவரத்து நிறுவனமான டிஹெச்எலில் எத்தனைப் பேர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டனர், எந்தப் பொறுப்புகளில் உள்ளோர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதுகுறித்தத் தகவல்களை டிஹெச்எல் நிறுவனமும் அதன் தொழிற்சங்கமும் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டன.

சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் டிஹெச்எல் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்...

மேகக்கணிமைச் சேவைகளை வழங்கும் எபிரியா நிறுவனத்தின் 51 வயது தலைமை நிதி அதிகாரி ஜென்னி லிம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

என்விடியா சில்லு மோசடி தொடர்பில் நான்காவது நபர்மீது குற்றச்சாட்டு

Singapore4 minutes ago

சிங்கப்பூரில், அதிநவீன என்விடியா (Nvidia) சில்லுகளின் பயன்பாடு தொடர்பான வழக்கில் நான்காவது நிர்வாகிமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேகக்கணிமைச் சேவைகளை வழங்கும் எபிரியா (Aperia) நிறுவனத்தின் 51 வயது தலைமை நிதி அதிகாரி ஜென்னி லிம்மீது வியாழக்கிழமை (ஏப்ரல் 2) மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எபிரியா இன்டர்நேஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒரே பங்குதாரர் ஏபிரியா மேகக்கணிமைச் சேவைகள்...

ஓசிபிசி வங்கியின் பங்குகள் இதுவரை இல்லாத அளவில் $22.83 என்ற நிலையை எட்டியது.

ஓரே வாரத்தில் $100 பில்லிய முதலீட்டைக் கடந்த சிங்கப்பூர் ஓசிபிசி வங்கிப் பங்குகள்

Singapore5 minutes ago

ஓசிபிசி வங்கி, சந்தை முதலீட்டில் முதன்முறையாக இந்த வாரம் $100 பில்லியனைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கிலிருந்து வந்த உத்தேசச் சொத்துகள், சேமிப்புக் கணக்கில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஆகியவற்றால் அந்த நிலையை வங்கியால் எட்ட முடிந்தது.

மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் வங்கியின் பங்குகள் முதன்முறையாக $22 என்ற இலக்கைத் தாண்டியது.

வியாழக்கிழமை (ஏப்ரல் 2)...

முரசு மேடை

நாடு திரும்பிய இந்தியர்கள்.

நாடு திரும்பிய 598,000 இந்தியர்கள்: இந்திய அரசு தகவல்

Indiaabout 1 hour ago

புதுடெல்லி: மத்திய கிழக்கில் மோதல் நீடித்து வரும் நிலையில், போரால் பாதிக்கப்பட்ட 598,000 இந்திய குடிமக்கள் திரும்பியுள்ளதாக இந்திய அரசு புதன்கிழமை (ஏப்ரல் 1) தெரிவித்தது.

விமானப் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து வருவதால் இந்த எண்ணிக்கை, வரும் நாள்களில் அதிகரிக்கக்கூடும் என வெளியுறவு அமைச்சின் கூடுதல் செயலாளர் (வளைகுடா) அஸீம் ஆர் மகாஜன் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி...

வேல்முருகன்.

நூறு தொகுதிகளில் போட்டியிடும் தவாக: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மனைவி

Tamilnaduabout 1 hour ago

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, நூறு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட அவர், தனது கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘கேமரா’ சின்னத்தை வழங்கியுள்ளது என்று அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த...

ஏப்ரல் 1, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா
Play Video

பணிப்பெண்களின் திறமைகளை அங்கீகரித்த ‘நிஜத்தின் நிழல்’ நிகழ்ச்சி
Play Video

மார்ச் 31, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

எண்ணெய் விலை ஏற்றத்தின் தாக்கம்: மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் உயர்வு
Play Video