கம்போடியாவின் சியெம் ரீப் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மாகவா எலி’ சிலைதிறப்பு நிகழ்ச்சி.

கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து உயிர்களைக் காத்த எலிக்குச் சிலை

World1 day ago

சியெம் ரீப்: கம்போடியாவில் தரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கால கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து, மக்களின் உயிரைக் காப்பாற்றி, எலிகளின் நாயகனாகத் திகழ்ந்த மாகவா எலிக்குச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அந்தச் சிலை சியெம் ரீப் மாகாணத்தில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. கம்போடியாவின் மூத்த அமைச்சரும் கம்போடிய கண்ணிவெடி நடவடிக்கை ஆணையத்தின் முதல் துணைத் தலைவருமான...

சரக்குக் கப்பலுக்கு அனுமதி கிடைத்திருப்பது தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க மலேசியக் கப்பலுக்கு அனுமதி எனத் தகவல்

World19 minutes ago

கோலாலம்பூர்: ஹோர்முஸ் நீரிணையில் இதற்கு முன்னர் தேங்கிக் கிடந்த ஏழு மலேசிய வர்த்தகக் கப்பல்களில் ஒன்று நீரிணையைப் பத்திரமாகக் கடந்துசெல்ல அனுமதி வழங்கப்பட்டு, அக்கப்பல் தனது இறுதி இலக்கை நோக்கி வந்துகொண்டிருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) காலை அமைச்சு ஓர் அறிக்கையை வெளியிட்டது.

“சுதந்திரமான கப்பல் போக்குவரத்து,...

ஹேர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் கிட்டத்தட்ட 21 விழுக்காடு எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு: ஆசிய விமானங்களின் எண்ணிக்கை குறைகிறது

World39 minutes ago

மத்திய கிழக்கு மோதலால் விமான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் விமானப் பயணங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன.

அத்துடன், அந்நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் கூடுதல் எரிபொருளை எடுத்துச் செல்கின்றன. அவசரத் தேவைக்கு எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படும் இடங்களை அவைக் கூடுதலாகச் சேர்த்து வருகின்றன.

எரிபொருளில் விலை ஏற்றத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள...

கம்போங் கிளாம் வட்டாரக் கடைவீடுகளின் விற்பனை 60 விழுக்காடு குறைந்துவிட்டதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

கம்போங் கிளாம் கடைவீடுகளை வாங்குவோர் உள்ளூர்வாசிகளே: ஆணையம் விளக்கம்

Singaporeabout 1 hour ago

கம்போங் கிளாம் வட்டாரத்தில் உள்ள கடைவீடுகளின் விற்பனை அண்மைய ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துவிட்டதாகவும் அவற்றை வாங்குவோரில் பெரும்பாலானவர்கள் உள்ளூர்வாசிகளே என்றும் நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹாஜி லேன் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான கடைவீடுகளை வெளிநாட்டினர் வாங்குவதாக டிக்டாக் காணொளிகளில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தத் தகவலுக்கு ஆணையம் பதிலளித்துள்ளது.

“இதுபோன்றக் குறைகூறல்கள் சொத்து மதிப்பு, மரபுசார்ந்த...

முரசு மேடை

உத்திபூர்வ தகவல்தொடர்புத் தொழில்நுட்ப நிலையம் அமைந்துள்ள கட்டடத்திலிருந்து புகை எழுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டது.

தற்காப்பு அமைச்சின் மின்னிலக்கத் தொழில்நுட்பக் கட்டடத்தில் தீ

Singaporeabout 1 hour ago

புவன விஸ்தாவில் தற்காப்பு அமைச்சின் உத்திபூர்வ தகவல்தொடர்புத் தொழில்நுட்ப நிலையம் அமைந்துள்ள கட்டடத்தில் திங்கட்கிழமை மாலை தீப்பற்றியது.

30 சைன்ஸ் பார்க் ரோட்டில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் தீப்பிடித்தது குறித்து மாலை 6.30 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இருப்பினும், தனது படையினர் சம்பவ இடத்துக்குச் செல்லுமுன்னரே கட்டடத்தில்...

வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டோனல்ட் டிரம்ப்.

உடன்படவில்லை எனில் ஈரானை ஒரே இரவில் முடித்துவிடுவேன்: டிரம்ப்

Worldabout 1 hour ago

வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உடன்பாடு எட்டத் தவறினால் ஒரே இரவில் ஈரானை ஒழித்துக்கட்டிவிடப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய மிரட்டலை விடுத்துள்ளார்.

வளைகுடா வழியாக தடையற்ற எரிசக்திப் போக்குவரத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட ஓர் ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய’ உடன்பாட்டிற்கு அவர் விதித்த காலக்கெடு, வாஷிங்டன் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) இரவு...

ஏப்ரல் 6, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

மத்திய கிழக்கு நிலவரம் சிங்கப்பூரில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
Play Video

இளையர்களை தமிழோடு இணைக்கும் தமிழ் மொழி விழா!
Play Video

மவுண்ட்பேட்டன் சமூக மன்றத் திறப்பு விழா
Play Video

மத்திய கிழக்கில் நிலவும் சிக்கலால் சிங்கப்பூரில் ஏற்படும் தாக்கத்தை ஆராயும் பணியைத் தொடங்கியது அமைச்சர்நிலைக் குழு: அமைச்சர் கா சண்முகம்
Play Video