சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் ஆலயங்கள்: ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயம்

1800களில் நிறுவப்பட்ட ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் சிங்கப்பூரின் ஆகப் பழமையான கோயில்களில் ஒன்று. அன்றைய சிங்கப்பூரில் இருந்த இந்திய தோட்ட ஊழியர்களும் வண்ணார்களும்  தொடக்கத்தில் மரம் ஒன்றின்கீழே காளி தேவியை வைத்துப் பூஜித்தனர்.

‘வைரவி மாதா காளியம்மன்’ என்ற பெயர் காலப்போக்கில் ‘வைராவிமட காளியம்மன்’ என்று பொதுவழக்கில் மருவியதாகக் கூறப்படுகிறது. லலிதா திரிபுரசுந்தரி என்ற தெய்வத்தின் ‘தசமகாவித்யா’ எனப்படும் பத்து அம்சங்களில் ‘பைரவி’ என்ற பெண் தெய்வம் ஒன்றாக உள்ளது.

கிள்ளினி ரோட்டில் இருந்த அந்தக் கோயில் 1921ஆம் ஆண்டில் சாமர்செட் ரோட்டிற்கு இடம் மாறியது. அதன் பின்னர், 1982ஆம் ஆண்டில் தோ பாயோவுக்கு இடம் பெயர்ந்தது. இப்போது அக்கோயிலில் திருமண மண்டபமும் உள்ளது.

ஆங்கிலமும் தமிழும் கற்பிக்கப்படும் பாலர் பள்ளியான சரஸ்வதி பாலர் பள்ளியை  ஆரம்பித்த பெருமை இந்த ஆலயத்தையே சாரும்.

சிங்கப்பூரில் துலாபாரம்  உள்ள ஒரே ஆலயம் இதுதான் என்று கூறப்படுகிறது.

Property field_caption_text
படம்: கூகல், ஏட்ரியன் சூங்

 

 

 

 

 

 

 

 

தொடர்பு கொள்ள:

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்

2001 லோரோங் 8 தோ பாயோ சிங்கப்பூர் 319259

தொலைபேசி எண்: 62595238

மின்னஞ்சல் முகவரி: svkt@heb.org.sg

மேலும் தகவல்கள், வழிபாட்டு நேரங்களுக்கு: https://heb.org.sg/our-subsidiaries/temples/sri-vairavimada-kaliamman-temple/

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon