சுடச் சுடச் செய்திகள்

நின்ற கோலத்தில் அத்திவரதர்

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி அளித்து வரும் அத்திவரதர் தரிசனத்தைக் காண ஏராளமான பக்தர்கள்  காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்குத் தொடர்ந்து சென்று வருகின்றனர். கடந்த முப்பது நாட்களாக சயன நிலையில் படுத்திருந்தவாறு வைக்கப்பட்டிருந்த அத்திவரதரின் திருமேனி நேற்று மாலை செங்குத்தாக நிற்கும் தோற்றத்திற்கு மாற்றப்பட்டது.

வண்ணப்பூக்களாலும் எண்ணெய்த் திரவியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அத்திவரதரைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இன்று அதிகாலை முதல் புதிய தோற்றத்துடன் இருக்கும் அத்திவரதரைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்தனர். சயன கோலத்தில் இருந்த திருமாலை ஏற்கெனவே காணச் சென்றிருந்தவர்கள்  அவரது புதிய தோற்றத்தைக் காண திரும்புவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் வரையிலான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகையளிப்பர்.

பெருகிவரும் பக்தர் கூட்டத்திற்கான மருத்துவ உதவிகளும் கழிவறை வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon