வரும் 20ஆம் தேதியன்று தீமிதித் திருவிழா

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம் மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தீமிதித் திரு விழா இம்மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.அன்றைய தினம் மாலை 6 மணிக்குப் பிறகு சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சக்தி கரகம் தயாரிக்கப்படும். பின்னர் இரவு சுமார் 7 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோயில் தலைமைப் பண்டாரம் கரகத்தைத் தலையில் ஏந்தி பெருமாள் கோயிலைவிட்டு புறப்படுவார்.

சிராங்கூன் ரோடு, சிலிகி ரோடு, பிராஸ் பசா ரோடு, நார்த் பிரிட்ஜ் ரோடு, சவுத் பிரிட்ஜ் ரோடு ஆகிய சாலைகளைக் கடந்து தலைமைப் பண்டாரம் இரவு சுமார் 8.30 மணிக்குப் பூக்குழியில் இறங்குவார். பெருமாள் கோயிலிலிருந்து தலைமைப் பண்டாரத்தைப் பின் தொடரும் 4,500க்கு மேற்பட்ட தீமிதிக்கும் ஆண் பக்தர்கள் ஒவ் வொருவராகப் பூக்குழியைக் கடந்து வருவார்கள்.

ஆண் பக்தர்கள் அனைவரும் தீக்குழியைக் கடந்தவுடன், பெண் பக்தர்கள் தீக்குழியை வலம் வந்து தங்கள் பிரார்த்தனையை நிறை வேற்றுவார்கள்.
தீமிதித் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 18ஆம் தேதி யன்று மாலை 6 மணிக்கும் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதம் எவர்ட்டன் பார்க், ஜாலான் புக்கிட் மேரா, தெலுக் பிளாங்கா, புக்கிட் பெர்மாய், தெலுக் பிளாங்கா ரைஸ், தெலுக் பிளாங்கா ஹைட்ஸ், ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில், ஹோய் ஃபாட் ரோடு, புக்கிட் மேரா வியூ ஆகிய இடங்களுக்கு வீதி உலா சென்று ஆலயம் திரும்பும்.

பின்னர் 21ஆம் தேதி திங்கட் கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து ஸ்ரீ திரௌபதையம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதம் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், லிட்டில் இந்தியா ஆர்க் கேட், ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ வடபத்திர காரியம்மன் கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்று பக்தர்களின் காணிக்கை களைப் பெற்றுக்கொண்டு ஆலயம் திரும்பும்.

மேலும், இம்மாதம் 18ஆம், 19ஆம் தேதிகளில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இரவு 8 மணிக்கும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெருமாள் கோயிலில் பிற்பகல் 3 மணிக்கும் தமிழகத்தின் திரு வீர மணி ராஜூ படைக்கும் பக்திப் பாடல்கள் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

“தீமிதிக்கும் ஆண் பக்தர் களும் தீக்குழியைச் சுற்றும் பெண் பக்தர்களும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய முறையை இவ்வாண்டு தீமிதித் திருவிழாவில் நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

“பக்தர்களின் பாதுகாப்புக் கார ணங்களுக்காகவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பக்தர்கள் பலர் தங்கள் விவரங்களைப் பதிந்துகொண்டு உள்ளனர்.

“கடைசி நேரம் வரை காத்திருக்காமல் பக்தர்கள் விரைந்து உங்கள் விவரங்களை 18ஆம் தேதிக்குள் பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“இவ்வாலயத்தின் மிகப் பெரிய விழாவான தீமிதித் திருவிழா ஆண்டுதோறும் வெற்றி பெற்று வருவதற்கு ஆலய நிர்வாகத்தினர், தொண்டர்கள், நிதி ஆதரவாளர் கள் ஆகியோருடன் பக்தர்களின் ஒத்துழைப்பும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

“கடந்த ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் பக்தர்களின் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் பெரிதும் நாடு கிறோம்,” என்று கூறினார் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் திரு எஸ் லட்சுமணன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!