சுடச் சுடச் செய்திகள்

திருவண்ணாமலை சிகரத்தில் ஒளி வீசிய கார்த்திகை தீபம்

தமிழகத்தின் புனிதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில், கார்த்திகை தீபம் ஆண்டுதோறும் ஏற்றப்படுகிறது. இவ்வாண்டும் அவ்வாறே அந்தத் தீபம் நேற்று மாலை 6 மணி வாக்கில் ஏற்றப்பட்டிருந்தது.

இத்திருநாள், கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி திதியில் இடம்பெறுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக , சுற்றுலாப் பயணிகளும் திருவண்ணாமலைக்குச் செல்வர்.

ஏற்றப்படும் தீபத்தைக் காணும் பக்தர்கள் தங்களது விருப்பத்திற்குரிய தெய்வத்தை நினைத்து உலக உயிரினங்கள் யாவும் நிம்மதி அடையவேண்டும் என வேண்டுவது முறை.

மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற, 3,000 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் காடாத் துணி, கொப்பரை ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வு ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. வாண வேடிக்கைகள், பட்டாசுகள் என பல்வேறு விதமாக பக்தர் கூட்டம் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.