ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பல்லக்கு உடைந்து பெருமாள் சிலை கீழே விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இராப்பத்து நிகழ்ச்சியின் 8ம் நாளையொட்டி திருச்சி ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 13), திருமங்கை மன்னன் வேடுபரி உற்சவம் நடைபெற்றது.

அரைமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வேடுபரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திருமங்கை மன்னன் நம்பெருமாளிடம் சரணாகதி அடையும் வைபமும் நடைபெற்றது.

அப்போது திடீரென பல்லக்கு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் ஆயிரம்கால் மண்டபத்தில் பரிகார பூஜைகள் நடைபெற்றன.

#தமிழ்முரசு #ஸ்ரீரெங்கநாதர் #பெருமாள்