படிப்படியான சம்பள உயர்வு முறை விரைவில் நடைமுறைக்கு வரலாம்

கழிவு மேலாண்மை, மறு­சு­ழற்­சித் துறை­யில் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை விரை­வில் நடை­முறைப்­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் ஒரு முத்­த­ரப்­புக் குழுவை அமைப்­பது தொடர்­பில் மனி­த­வள அமைச்­சிற்கு அண்­மை­யில் ஒரு பரிந்­துரை அனுப்­பப்­பட்­டுள்­ளது.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் துணைத் தலை­மைச் செய­லா­ளர் ஸைனல் சப்­பாரி நேற்று இத­னைத் தெரி­வித்­தார்.

கழிவு மேலாண்மை, மறு­சு­ழற்­சிச் சங்­கத்­தில் இருந்து அப்­ப­ரிந்­து­ரை­யைப் பெற்ற என்­டி­யுசி, பின் அதனை மனி­த­வள அமைச்­சிற்கு அனுப்பி இருப்­ப­தா­க­வும் அமைச்­சின் பதிலை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­க­வும் திரு சப்­பாரி கூறி­னார்.

கிராஞ்சி கிர­சென்­டில் உள்ள ‘வா அண்ட் ஹுவா பிரை­வேட் லிமிட்டெட்’ எனும் கழிவு மேலாண்மை நிறு­வ­னத்­திற்கு என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் திரு இங் சீ மெங்­கும் திரு சப்­பா­ரி­யும் வருகை மேற்­கொண்­ட­னர்.

கழிவு மேலாண்மை, மறு­சு­ழற்­சித் துறை­யில் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை எப்­போது நடை­முறைப்­ப­டுத்­தப்­படும் எனக் குறிப்­பிட்­டுச் சொல்ல முடி­யாது என்­றும் அதனை நடை­மு­றைப்­படுத்­தச் சிறிது காலம் ஆகலாம் என்­றும் அவ்­வி­ரு­வ­ரும் செய்­தி­யாளர்­க­ளி­டம் தெரி­வித்­த­னர்.

எடுத்­துக்­காட்­டாக, தேர்ச்சி நிலை­கள் தொடர்­பில் அத்­துறை சார்ந்த நிறு­வ­னங்­க­ளு­டன் முத்­தரப்புக் குழு பணி­யாற்ற வேண்டி இருக்­கும் என்­றும் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறையை நடை­முறைப்­ப­டுத்த சட்­ட­பூர்வ அமைப்­பு­களு­டன் இணைந்து பொருத்­த­மான வழி­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும் என்­றும் திரு ஸைனல் விளக்­கி­னார்.

கடந்த வாரம் நாடா­ளு­மன்­றம் கூடி­ய­போது, எல்­லாத் துறை­க­ளி­லும் குறைந்­த­பட்ச ஊதி­ய­மாக $1,300 வழங்­கப்­பட வகை­செய்ய வேண்­டும் என்று பாட்­டா­ளிக் கட்சி வலி­யு­றுத்­தி­யது. அப்­போது, படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யால் 80,000 துப்­பு­ர­வா­ளர்­கள், பாது­கா­வ­லர்­கள், நில­வ­னப்பு ஊழி­யர்­கள் அண்­மைய ஆண்­டு­களில் 30% ஊதிய உயர்வு பெற்­றுள்­ள­தாக அர­சாங்­கம் குறிப்­பிட்­டது.

கடந்த 2012ஆம் ஆண்­டில் அறி­மு­கப்படுத்தப்பட்ட படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை, இது­வரை மூன்று துறை­களில் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்டுள்­ளது. இதை­யடுத்து, அம்­முறை மிக­வும் மெது­வாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா எனப் பாட்­டா­ளிக் கட்சி கேள்வி எழுப்­பி­யது.

அது­பற்றி திரு இங்­கி­டம் கேட்­ட­தற்கு, “நீண்­ட­கால நோக்­கில், படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை மட்­டு­மின்றி, ஒட்­டு­மொத்த சாத்­தி­யங்­க­ளை­யும் ஆராய்ந்து, பல்­வேறு துறை­க­ளி­லும் ஊழி­யர்­க­ளின் ஊதி­யத்தை உயர்த்த முடி­யும் என என்­டி­யுசி நம்­பு­கிறது,” என்று பதில் ­அளித்­தார்.

வேலை­ந­லன் துணை வரு­மானத் திட்­டத்­து­டன் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யால் ஏரா­ள­மான ஊழி­யர்­கள் பல­ன­டைந்­து உள்­ள­தாக திரு இங் குறிப்­பிட்­டார்.

அத்­து­டன், ஊதி­யத்தை உயர்த்­தும் சுமை முழு­வ­து­மாக நிறு­வ­னங்­கள் மீது சுமத்­தப்­ப­டு­வ­தில்லை என்­றும் அவர் சுட்­டி­னார்.

குறைந்த வரு­மான ஊழி­யர்­களுக்கு வேலை­ந­லன் துணை வரு­மா­னத் திட்­டம் மூலம் கூடு­தல் ரொக்­கம் கிடைக்­கிறது. அத­னால், நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் உற்­பத்­தித்­தி­றனை மேம்­ப­டுத்த முடி­யும் என்­றும் ஒட்­டு­மொத்த துறை­யும் வளர்ந்து, ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் ஊதி­யம் கிடைக்­க­லாம் என்­றும் திரு இங் கூறி­னார்.

ஊழி­யர்­க­ளுக்கு உத­வு­வ­தன் வழி­யாக நிறு­வ­னங்­க­ளுக்­கும் கைகொ­டுக்­கி­றோம் என்ற அவர், இத­னால் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் பல­ன­டைய முடி­கிறது என்­றும் சொன்­னார்.

தொழில்­துறை தாக்­குப் பிடிக்க முடி­யாத அள­விற்கு ஊழி­யர்­க­ளுக்­கான கூடு­தல் ஊதி­யம் இருந்­தால், நிறு­வ­னங்­கள் மூடப்­பட்டு, ஊழி­யர்­கள் வேலை­யின்­றித் தவிக்க நேரி­ட­லாம் என்­றும் திரு இங் குறிப்­பிட்­டார்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை, வேலை­ந­லன் துணை வரு­மா­னம் என இரண்­டும் சேர்ந்த ஒட்­டு­மொத்­தப் பிரச்­சி­னை­யாக இதை நாம் பார்க்க வேண்­டும் என்று திரு இங் கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!