ஜூரோங் பறவை பூங்கா: அலைமோதும் கூட்டம்

ஜூரோங் பறவை பூங்கா 1971ல் திறக்கப்பட்டது. அது முதல் 40 மில்லியனுக்கும் அதிக பார்வையாளர்களை அது கவர்ந்து ஈர்த்து இருக்கிறது. 

அந்தப் பறவை பூங்கா மூடப்படவிருப்பதாக கடந்த ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்டது. 

அது முதல் அந்தப் பூங்காவுக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு மடங்காகிவிட்டதாக அதை நிர்வகித்து நடத்தும் மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்துள்ளது. 

எல்லாவற்றுக்கும் உச்சமாக டிசம்பர் 26ஆம் தேதியன்று ஒரே நாளில் அந்தப் பூங்காவிற்கு 8,000 பேர் வந்து சென்றனர்.

இது அன்றாட சராசரி எண்ணிக்கையைப் போல நான்கு மடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பூங்கா ஜனவரி 3ஆம் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நவம்பர் 19 முதல் ஜனவரி 3 முதல் நுழைவுச் சீட்டு வெறும் 10 வெள்ளிக்கு விற்கப்படுகிறது. 

அந்தப் பூங்கா மூடப்பட்ட பிறகு அது மண்டாய் வனவிலங்கு காப்பகத்தில் அமையவுள்ள பறவைப் பூங்காவிற்கு இடம் மாறும். 

பூங்காவின் சுமார் 130 ஊழியர்களும் ஏறக்குறைய 3,500 பறவைகளும் புதிய இடத்திற்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!