சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரசாரத்தில் செய்யக்கூடியவை, கூடாதவை

கொவிட்-19 இரண்டாம் கட்ட தளர்வின்போது பொதுத் தேர்தல் இடம்பெற்றால், தேர்தல் பிரசாரம் குறித்த முதற்கட்ட வழிகாட்டி விதிமுறைகளை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது. 

1. நேரடி பிரசாரம் இல்லை

GE1.png

Property field_caption_text
  • - வேட்பாளர்கள் மின்-பிரசார நேரடிக் காணொளிக் காட்சிகளையும் பிரசார நடவடிக்கைகளையும் இணையம் வழி காட்டலாம். - அவர்கள் விருப்பப்பட்டால், அரசாங்கம் வழங்கும் பிரசார இடங்களிலிருந்து நேரடிக் காணொளிக் காட்சிகளை தாங்கள் அறிவித்த தளங்களில் காட்டலாம். 

2. கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேசிய தொலைக்காட்சியில் அதிக ஒளிபரப்பு நேரம்

GE2.png

Property field_caption_text
  • - தொகுதி அரசியல் ஒலிபரப்பு (புதியது): தனித்தொகுதி வேட்பாளருக்கு 3 நிமிடங்கள்; குழுத்தொகுதி வேட்பாளர்கள் குழுவுக்கு 12 அல்லது 15 நிமிடங்கள் வழங்கப்படும். - இவை மீடியாகார்ப் ஒளிவழி 5ல் ஒளிபரப்பாகும். - இவற்றுடன், ஒவ்வொரு கட்சிக்கும் 2 கட்சி ஒலிபரப்புகள்  19 தொலைக்காட்சி/வானொலி ஒலி/ஒளிவழிகளில் வழங்கப்படும்.

3. தொகுதிச் சுற்றுலா,  வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு

GE3.png

Property field_caption_text
  • - இதற்கு அனுமதி உண்டு. ஆனால் ஒரு குழுவில் ஐவருக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு குழு உறுப்பினர் மற்றொரு குழுவுக்கு மாறக்கூடாது.  - ஒரு குழுவுக்கும் மற்ற குழுக்களுக்கும் இடையே ஒரு மீட்டர் தூர இடைவெளி இருக்க வேண்டும்.  - நெருங்கிய தொடர்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கைகுலுக்குதல் கூடாது.

4. ஆதரவாளர்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை

GE4.png

Property field_caption_text
  • - வேட்புமனு தாக்கல் நிலையங்களிலும் வாக்களிப்பு நாளன்று ஒன்றுகூடும் நிலையங்களிலும் ஆதரவாளர்கள் ஒன்று கூடுதவதற்கு அனுமதி இல்லை.  - அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளை தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பார்க்கலாம். 

5. தேர்தல் பிரசார வாகனங்கள்

GE5.png

Property field_caption_text
  • - பிரசாரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால் வேட்பாளர்கள் அதிலிருந்து பேசவோ, இசையை, காணொளியை நேரடியாக ஒலி/ஒளிபரப்பு செய்யவோ கூடாது.  - வாக்களிப்பு நாளுக்குப் பிறகு நன்றி கூறும் வாகன ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. - பதாகைகளும் சுவரொட்டிகளும் அனுமதிக்கப்படும். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon