லோ தியா கியாங்: என் இலக்குகள் நிறைவேறிவிட்டன

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங், 63, அரசியல் தேர்தல் களத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

ஏறக்குறைய 40 ஆண்டு காலம் அரசியலில் இருந்துள்ள அவர், 29 ஆண்டுகள் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றினார்.

பாட்டாளிக் கட்சியின் தலைவராக 17 ஆண்டு காலம் இருந்து வந்துள்ள திரு லோ, தன்னுடைய பணிகள் நிறைவடைந்துவிட்டதால், வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நேற்று (ஜூன் 25) அறிவித்தார்.

பாட்டாளிக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜே.பி. ஜெயரத்னத்திடமிருந்து 2001ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது திரு லோ, தனக்குத் தானே இரண்டு இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டார்.

பாட்டாளிக் கட்சியைக் குழுத்தொகுதியில் வெற்றிபெறச் செய்துவிட வேண்டும் என்பது ஓர் இலக்கு. அதை 2011ல் இவர் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் வென்று நிறைவேற்றினார்.

இரண்டாவது இலக்கு பாட்டாளிக் கட்சியை இளம் தலைவர்கள் அடங்கிய புதிய தலைமுறையிடம் ஒப்படைப்பது.

பல ஆண்டு காலமாக திரு லோ இளையர்களைத் தன் கட்சியில் சேர்த்து வந்தார். 2018ல் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொண்டு அந்தப் பொறுப்பை 43 வயதான திரு பிரித்தம் சிங்கிடம் ஒப்படைத்தார்.

அரசியல் தேர்தல் களத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த பிறகு அளித்த முதல் பேட்டியில், எந்தவொரு வருத்தமும் இல்லாமல் தாம் விலகுவதாக திரு லோ தெரிவித்தார்.

திரு லோ, கடந்த ஏப்ரல் மாதம் அப்பர் தாம்சனில் இருக்கும் தன் வீட்டில் கீழே விழுந்துவிட்டார். மே 21ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்யாங் பல்கலைக்கழகத்தில் பயின்ற திரு லோ, பிறகு ஆசிரியராகப் பணியாற்றினார்.

மக்களின் வாழ்வை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு அரசியல்தான் வழி என்பதை உணர்ந்துகொண்டு 1982ல் பட்டாளிக் கட்சியில் சேர்ந்தார். 2001ல் கட்சித் தலைவராக திரு லோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது தலைமைத்துவத்தின்கீழ் கட்சி வேறுபட்ட திசையை நோக்கி திரும்பியது. அன்றாட பிரச்சினைகளிலும் நாடாளுமன்றத்தில் ஆக்ககரமான அரசியலை நடத்துவதிலும் கட்சி கவனத்தைத் திருப்பியது.

நாட்டை ஆட்சி புரிவதில் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி திசை மாறினால் அதைத் தடுத்து நிறுத்தி திருத்தும் இணை வாகன ஓட்டுநராக பாட்டாளிக் கட்சி செயல்படும் என்று திரு லோ 2011ல் வர்ணித்தார்.

மக்களை, வாக் காளர்களை எப்போதுமே மறக்க மாட்டேன் என்றார் திரு லோ.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!