24 வேட்பாளர்களையும் அறிவித்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி; லீ சியன் யாங் தற்போதைக்கு களத்தில் இல்லை

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (PSP) வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள 24 வேட்பாளர்களில் கடைசி அறுவரை நேற்று அறிவித்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு அந்தக் கட்சியில் சேர்ந்த திரு லீ சியன் யாங்கின் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை.

நேற்று முன்தினம் திரு லீயின் கட்சி உறுப்பினர் அட்டை தியோங் பாரு சந்தையில் நிகழ்ந்த சந்திப்பின்போது கட்சியின் தலைவரால் வழங்கப்பட்டது. அவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்ற வதந்தியும் வலம் வந்தது.

வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் மாற்றப்படக்கூடும் என்று கட்சியின் தலைவர் டான் செங் போக் இன்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளையு டாக்டர் டான் இன்று அறிவித்தார்.

மேரிமவுண்ட், இயோ சூ காங், பைனியர், ஹோங் கா நார்த், கெபுன் பாரு ஆகிய தனித்தொகுதிகளிலும் வெஸ்ட் கோஸ்ட், நீ சூன், சுவா சூ காங், தஞ்சோங் பகார் ஆகிய குழுத்தொகுதிகளிலும் தமது கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என்றார் அவர்.

மொத்தமுள்ள 11 எதிர்க்கட்சிகளில் ஆக அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களைக் களமிறக்குகிறது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி.

டாக்டர் டான் 26 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஆயர் ராஜா தனித்தொகுதியை தற்போது உள்ளடக்கியிருக்கும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடும் குழுவுக்கு தலைமை தாங்குகிறார். திருவாட்டி ஹேஸல் புவா, 50, திரு நடராஜா லோகநாதன், 57, ஆகிய இருவரும், இன்று அறிமுகம் செய்யப்பட்ட இருவரும் அந்தக் குழுத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

இன்று அறிமுகம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் கட்சியின் இணை பொதுச் செயலாளர் லியோங் முன் வாய், 60; Ed எனும் பன்னாட்டு காப்புறுதி நிறுவனத்தின் ஆசியா பசிபிக் தலைமை விற்பனை அதிகாரியான 51 வயதான திரு ஜெஃப்ரி கூ போ தியோங் மற்றொரு வேட்பாளர்.

ஐந்து தொகுதிகளைக் கொண்ட தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் வழக்கறிஞர் வெண்டி லோ, 43, தொழில்நுட்பர் ஹரிஷ் பிள்ளை, 60, கட்சியின் ஏற்பாட்டுச் செயலாளர் மைக்கேல் சுவா, 55, மூத்த பயிற்றுவிப்பாளார் அபாஸ் கஸ்மானி, 67, புதுமுகம் (சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி) டெரென்ஸ் சூன், 29 ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்று அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு வேட்பாளார் கல்வியாளரான திருவாட்டி கலா மாணிக்கம், 52. அவர் ஐந்து உறுப்பினர் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிடுகிறார். தகவல் தொழில்நுட்ப திட்டப்பணி மேலாளர் தௌஃபிக் சுபன், 40, ஊடக ஆலோசகர் பிரேட்லி பௌவர், 53, கட்சியின் காசாளார் திரு நல்லகருப்பன், 56, வாடிக்கையாளர் சேவை மேலாளர் டேமியன் டே, 51 ஆகியோர், கட்சியின் சார்பில் அந்த குழுத்தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்.

நான்கு உறுப்பினர் சுவா சூ காங் குழுத்தொகுதியில் சிங்கப்பூர் ஆகாயப் படையின் முன்னாள் கலோனல் ஃபிரான்சிஸ் யுவென், 70, கல்வியாளார் டான் மெங் வா, 57, சட்டத்துறை பட்டதாரி சு ஷுவான் மிங், 23, தீயணைப்புப் பொறியாளர் அப்துல் ரஹ்மன் முகமது, 67 ஆகியோர் PSP சார்பில் போட்டியிடுகின்றனர்.

மனநல நிபுணர் அங் யோங் குவான், 65, கணக்காளர் கெய்லா லோ, 43, ‘தி இண்டிபெண்டன்ட் சிங்கப்பூர்’ இனையப்பக்கத்தின் முன்னாள் வெளியீட்டாளர் குமரன் பிள்ளை, 57, ஆகியோர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மேரிமவுன்ட், இயோ சூ காங், கெபுன் பாரு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவிலிருந்து திரும்பிய திருவாட்டி கிஜின் வோங், 54, ஹோங் கா நார்த் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார்.

இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிதி ஆலோசகரான திரு லிம் செர் ஹோங், 42, பைனியர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

“வேட்பாளர்களின் நிறம், பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு இன்றி, வேட்பாளர்களின் திறன், நேர்மை, உண்மையான உழைப்பு, சேவை செய்வதில் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களியுங்கள்,” என்று டாக்டர் டான் கேட்டுக்கொண்டார்.

பைனியர், மேரிமவுண்ட், இயோ சூ காங் ஆகிய தொகுதிகளில் இக்கட்சி மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!