கோ சோக் டோங்-ஒரு சகாப்தம்

சிங்­கப்­பூ­ரின் இரண்­டா­வது பிர­த­ம­ராக 1990 முதல் 2004 வரை சேவை­யாற்­றிய திரு கோ சோக் டோங் அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெறு­கி­றார். திரு கோ, 79, நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக 44 ஆண்­டு­கள் சேவை­யாற்றி இருக்­கி­றார். 2011ல் அமைச்­ச­ர­வை­யில் இருந்து வில­கிக்­கொண்­டார். அது முதல் அவர் கௌரவ மூத்த அமைச்­சர் என்று குறிப்­பி­டப்­ப­டு­கி­றார்.

அர­சி­யல் களத்­தில் இருந்து வில­கிக்­கொண்­டா­லும் சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லத்­தில் தொடர்ந்து அவர் ஈடு­பாடு கொண்­டி­ருப்­பார். இதை அவர் கோடி­காட்டி இருக்­கி­றார்.

திரு கோ 1941ல் உழைக்­கும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்­பம் ஒன்­றில் பிறந்­தார். உரு­வத்­தி­லும் உயர்ந்­தி­ருந்த திரு கோ, அர­சாங்க ஊழி­ய­ரா­கச் சேவை­யாற்­றத் தொடங்கி, ‘நெப்­டி­யூன் ஓரி­யண்ட் லைன்ஸ்’ என்ற நிறு­வ­னத்­தின் தலை­வ­ரா­னார். 1976ல் 35வது வய­தில் அர­சி­ய­லுக்கு வந்­தார்.

பல அமைச்­சு­க­ளுக்­குப் பொறுப்­பேற்­றார். 1985ல் துணைப் பிர­த­மர் ஆனார். அதற்கு ஐந்து ஆண்டு கழித்து திரு லீ குவான் இயூ­வி­டம் இருந்து பிர­த­மர் பொறுப்பேற்­றார்.

“திரு லீ குவான் இயூ­வுக்கு பிற­கும் சிங்­கப்­பூர் செழித்­தோங்­கும். இதை நான் உறுதி செய்வேன்,” என்று கூறி 1990 நவம்­பர் 28ஆம் தேதி பிர­த­மர் பொறுப்பை ஏற்­றுக்­கொண்­டார் திரு கோ. 14 ஆண்டு காலம் பிர­த­ம­ரா­கச் சேவை­யாற்­றி­னார். 1990ல் $21,950 ஆக இருந்த தனிநபர் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி அவ­ரது தலை­மை­யின்­கீழ் 2004ல் $38,000க்கும் அதி­க­மா­கக் கூடி­யது.

அமெ­ரிக்கா, ஜப்­பான் உள்­ளிட்ட பல நாடு­க­ளு­டன் தாராள வர்த்­தக உடன்­பா­டு­க­ளைக் கண்­டார்.

சிங்­கப்­பூரை கரு­ணை­மி­குந்த, பெருந்­தன்­மை­யான நாடாக ஆக்க வேண்­டும் என்று நம்­பிக்­கை கொண்­டி­ருந்த இரண்­டாம் தலை­முறை மசெக தலை­வர்­க­ளுக்கு தலைமை ஏற்­றி­ருந்த திரு கோ, அந்த இலக்கை நிறை­வேற்­றும் வகை­யில் அர­சாங்­கத்­திற்­கும் மக்­க­ளுக்­கும் இடை­யில் பிணைப்பை புதுப்­பித்து வலுப்­ப­டுத்­தி­னார்.

செவி­ம­டுக்­கும் அர­சாங்­க­மாக, செல்வச் செழிப்­பில் மட்­டு­மின்றி இத­ய­பூர்­வ­மான அம்­சங்­களி­லும் கவ­னம் செலுத்­தும் அரசாக தன்­ அரசை அவர் கொண்டுசென்றார்.

1990களில் சிங்­கப்­பூ­ரில் இந்­தியா பற்­றிய எண்­ணத்­தைக் கிளப்­பி­விட்­டார். பல தடவை அந்த நாட்­டிற்­குச் சென்று வந்­தார். ஆசி­யா­னுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யில் அணுக்க உறவு வேண்­டும் என்று அரும்­பாடு­பட்­டார். இந்­தியா-சிங்­கப்­பூர் பரந்த பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாடு பூர்த்­தி­யாக பெரும் முயற்சி மேற்­கொண்­டார். ஆசி­யான் ஒற்­று­மைக்கு அரும்­பா­டு­பட்­டார்.

உல­கின் பல வட்­டா­ரங்­க­ளு­டன் தொடர்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான சிங்­கப்­பூ­ரின் முயற்­சி­க­ளுக்­குத் தலைமை தாங்­கி­னார்.

பலரையும் கவர்ந்தார்

தலை­மைத்துவ மாற்­றம் தொடர வேண்­டும் என்­ப­தற்­கான வியூ­கங்­களை வகுத்­துச் செயல்­பட்­டார். தற்­காப்பு அமைச்­ச­ரா­கப் பணி­யாற்­றி­ய­போது சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் ஒரு தலை­வ­ராக இருந்த திரு லீ சியன் லூங்கை அடை­யா­ளம் கண்டு அர­சி­ய­லுக்கு வரு­மாறு அவரை இணங்­கச் செய்­தார்.

திரு லீ 1984ல் தேர்­த­லில் போட்டி­யிட்­டார். அவரை மட்­டு­மல்ல. மூன்­றாம் தலை­மு­றைத் தலை­வர்கள் பல­ரை­யும் அர­சி­ய­லுக்­குக் கொண்டு வந்­த­வர் திரு கோ.

முன்­னாள் அமைச்­சர் ஜார்ஜ் இயோ, மூத்த அமைச்­சர்­க­ளான டியோ சீ ஹியன், தர்­மன் சண்­மு­க­ரத்­னம், போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கோ பூன் வான், வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ் ணன், லிம் ஹங் கியாங், பேராசிரியர் யாக்­கூப் இப்­ரா­ஹிம், லிம் சுவீ சே ஆகி­யோர் அவர்­களில் அடங்கு­வர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் அர­சி­யல் பற்­றிய தங்­கள் கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வ­தற்­காக கருத்­த­றி­யும் பிரிவை உரு­வாக்­கி­ய­வர் திரு கோ.

வர­வு­செ­ல­வுத் திட்ட உப­ரி­யைக் கொண்டு அறக்­கட்­டளை நிதி ஒன்றை ஏற்­ப­டுத்தி வசதி குறைந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நிதி ஆத­ரவு கிடைக்க வகை செய்­தார்.

வர­வு­செ­ல­வுத் திட்ட உப­ரியை மக்களின் மத்­திய சேம நிதிக் கணக்­கில் பணம் நிரப்புதல் மூலம் அதை அவர்களுக்கு முதன்­மு­தலாக பகிர்ந்து அளிக்­கத் தொடங்­கி­ய­தும் திரு கோவின் அர­சாங்­கம்­தான்.

அடித்­தள நிலை­யில் சமூக மேம்­பாட்டு மன்­றங்­களை, அனைத்து சமய நன்­னம்­பிக்­கைக் குழுக்­களை, நல்­லி­ணக்­கக் குழுக்­களை அமைத்து இன, சமூ­கப் பிணைப்பை வலுப்­ப­டுத்த திரு கோ முயன்­றார்.

அர­சு நாடா­ளு­மன்ற குழுக்­கள், நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முறை போன்ற அர­சி­யல் புதி­னங்­களைத் திரு கோ மேற்­பார்­வை செய்­தார். அமெ­ரிக்­கா­வில் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் இடம்­பெற்று அதன் விளை­வாக பொரு­ளி­யல் நெருக்­கடி ஏற்­பட்­டி­ருந்த போதி­லும் 2001 தேர்­த­லில் மக்­கள் செயல் கட்சி 75 விழுக்­காட்டு வாக்­கு­களு­டன் இவ­ரது தலை­மைத்­து­வத்­தின் கீழ் வெற்றி பெற்­றது.

சகாப்தம் முடிகிறது

திரு கோவு­டன் பாட்­டா­ளிக் கட்சியின் முன்­னாள் தலை­வர் லோ தியா கியாங்­கும் அர­சி­யல் தேர்­தல் களத்­தில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்து இருக்­கி­றார்.

இந்த அறி­விப்­பு­கள் பல சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பொறுத்த வரை­யில் ஒரு சகாப்தத்தின் முடி­வைக் குறிப்­ப­தா­கவே இருக்­கிறது என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பிட்டு உள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

அதி­பர் ஹலிமா யாக்­கோப் 20 ஆண்­டு­க­ளுக்கு முன் அர­சி­ய­லில் ஈடு­பட கார­ண­மாக இருந்­த­வ­ரும் திரு கோ என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. திரு கோவின் குண­ந­லன்­களை­யும் தொண்­டு­க­ளை­யும் கருணை­யு­டன் அவர் செவி­சாய்த்த பாணி­யை­யும் பிர­த­மர், அமைச் சர்கள், எம்பிக்கள் முதல் பொது­மக்­கள் வரை பல­ரும் பெரிதும் பாராட்டி இருக்­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!