பிரசார வாகனங்களுக்கான உரிமங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட பிரசார வாகனங்களுக்கான காவல்துறை உரிமங்களுக்கு, வேட்புமனுத் தாக்கல் தினமான நாளை பிற்பகல் 2 மணி முதல்  வேட்பாளர்கள்  விண்ணப்பிக்கலாம்.

பிரசாரத்தின்போது, வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபரப்புக் கருவிகள் மூலம், முன்பே பதிவுசெய்யப்பட்ட பிரசார உரைகளை மட்டுமே வேட்பாளர்கள் ஒலிபரப்பலாம்.

பிரசார வாகனத்திலிருந்து வேட்பாளர்கள் நேரடியாகப் பேசுவதற்கும் நேரடி ஒலி, ஒளி, இசை ஆகியவற்றை ஒளிபரப்புவதற்கும் அனுமதியில்லை.

பிரசார ஓய்வு நாளுக்கு முந்தைய நாளான ஜூலை 8ஆம் தேதி நண்பகல் வரையிலும் வேட்பாளர்கள் காவல்துறை உரிமங்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பிரசார ஒய்வு நாளான ஜூலை 9ஆம் தேதி எந்த தேர்தல் பிரசாரமும் செய்யக்கூடாது. அடுத்த நாளான ஜூலை 10 வாக்களிக்கும் நாள்.

பிரசார வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமங்களுக்கு https://www.police.gov.sg/e-services என்று இணையத்தளத்தை வேட்பாளர்கள் நாடலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நேரடியாகச் செல்லவேண்டிய அவசியமில்லை என்று காவல்துறை தெரிவித்தது.