டான் ஜீ சே மீண்டும் ஜனநாயக கட்சியில்

முன்னாள் ‘சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை கட்சி’யின் தலைவர் திரு டான் ஜீ சே, மீண்டும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் தமது கட்சியைக் கலைத்த திரு டான் ஜீ சே, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவானை தாம் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், அரசாங்கத்தின் நடவடிக்கை களைக் கண்காணிக்கவும், மக்களுக்கு ஒரு மாற்றுக் குரலை வழங்கவும் சிங்கப்பூ ருக்கு வலுவான எதிர்த்தரப்பு தேவை எனக் குறிப்பிட்டார்.

தாம் நம்பும் மதிப்புகளையும் நம்பிக்கைகளையும் ஜனநாயகக் கட்சி பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

திரு டானின் விண்ணப் பத்தை உறுதிப்படுத்திய ஜனநாயகக் கட்சி, அதுகுறித்த மேல் விவரங்களை பின்னர் வெளியிடும் எனக் கூறியது. ஏற்றுக்கொள்ளப்பட்டால், அக்கட்சியில் திரு டான் இணைவது இது மூன்றாவது முறையாக இருக்கும்.

2011ல் ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த திரு. டான், அப்போது ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதியில் போட்டியிட்டார். பின் அதிபர் தேர்தலில் போட்டி யிடுவதற்காக அக்கட்சியிலி ருந்து விலகினார். பின் மீண்டும் சேர்ந்த அவர், 2014ல் சிங்கப் பூரர்களுக்கு முன்னுரிமை எனும் கட்சியைத் தொடங்கும் வரை அதில் இருந்தார்.