வேட்பு மனு தாக்கல்: அண்மைய நிலவரம்

 • பைனியர் தனித்தொகுதியில் மும்முனைப் போட்டி. மக்கள் செயல் கட்சியின் சார்பில் திரு பேட்ரிக் டே, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சார்பில் லிம் செர் ஹோங் ஆகியோருடன் சுயேச்சை வேட்பாளர் சியாங் பெங் வா களமிறங்குகிறார்.
 • ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல்கட்சியின் வேட்பாளர்களாக மனிதவள அமைச்சர் ஜோசபின் டியோவின் தலைமையில் திரு ஹெங் சீ ஹாவ், திருவாட்டி டெனிஸ் புவா, புதுமுகமான வான் ரிசால் வான் ஸக்காரியா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
 • பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதியில் மும்முனைப் போட்டி. மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மக்கள் குரல் கட்சி ஆகியவை போட்டியில் களமிறங்குகின்றன.
 • பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், 65, திரு ஜனில் புதுச்சேரி, 47, புதுமுகங்களான திரு முகமது ஷராயல் தாஹா, 39, திருவாட்டி இயோ வான் லிங், 44, திரு டெஸ்மண்ட் டான் கோக் மெங், 50 ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 • செங்காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் திரு இங் சீ மெங், டாக்டர் லாம் பின் மின், திரு அம்ரின் அமின், திரு ரேமண்ட் லாய் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 • செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சியின் சார்பில் திருவாட்டி ஹி டிங் ரு, திரு லுயிஸ் சுவா, டாக்டர் ஜேமஸ் லிம், திருவாட்டி ரயீசா கான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 • அல்ஜுனிட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் திரு விக்டர் லாய், 58, திரு அலெக்ஸ் இயோ 41, திரு சான் ஹுயி யூ, திரு சுவா எங் லியோங், திரு ஷம்சுல் கமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 • அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், கட்சித் தலைவர் சில்வியா லிம், திரு ஃபைசால் மனாப், திரு லியோன் பெரேரா, திரு ஜெரால்டு கியாம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 • பாட்டாளிக் கட்சியின் டெனிஸ் டான், 49, ஹவ்காங் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் திரு லீ ஹோங் சுவாங், 50, களமிறங்கவுள்ளார்.
 • ஜூரோங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்களாக திரு தர்மன் சண்முகரத்னம், திருவாட்டி ரஹாயு மஸாம், டாக்டர் டான் வு மெங், திரு ஷான் ஹுவாங், தி ஷை யாவ் குவான் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
 • புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளராக திரு முரளி பிள்ளை போட்டியிடவுள்ளார்.
 • மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்களாக திரு லாரன்ஸ் வோங், திரு ஸாக்கி முகமது, திரு அலெக்ஸ் யாம், புதுமுகமான திருவாட்டி ஹேனி சோ ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
 • பாட்டாளிக் கட்சியின் திரு டான் சென் சென் பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
 • அங் மோ கியோ குழுத்தொகுதியில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியை எதிர்த்து கென்னெத் ஜெயரெத்னம் தலைமையிலான சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சி போட்டியிடுகிறது.
 • ஹாலண்ட் - புக்கிட் தீமா குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், திருவாட்டி சிம் ஆன், திரு கிரிஸ்டஃபர் டி சோசா திரு எட்வார்ட் சியா
 • சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சார்பில் திரு குமரன் பிள்ளை, கெபுன் பாரு தனித்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
 • மக்கள் செயல் கட்சியின் திரு லிம் பியோ சுவான் மவுண்ட்பேட்டன் தனித் தொகுதியிலும் திருவாட்டி டின் பெய் லிங் மெக்பர்சன் தனித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
 • திருவாட்டி கிரேஸ் ஃபூ, யூஹுவா தனித் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிடவுள்ளார்.
 • பைனியர் தனித்தொகுதியில் போட்டியிட விரும்பும் சுயேச்சை வேட்பாளர் திரு செங் பெங் வா ஜூரோங் பைனியர் தொடக்கக்கல்லூரியில் உள்ள வேட்பு மனுத் தாக்கல் நிலையத்துக்கு வந்துள்ளார்.
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!