லீ சியன் யாங் தேர்தலில் போட்டியிடவில்லை

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினரான திரு லீ சியன் யாங், இன்று காலை வேட்பு மனு தாக்கல் நிலையத்துக்கு அருகில் கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடன் காணப்பட்ட நிலையில், அவர் வேட்பாளராகக் களமிறங்கவில்லை.

ஜூலை 10 தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவுற்ற நிலையில், அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை.

அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்ட காணொளியில், “அதீத பெரும்பான்மைக்கு எதிராக வாக்களியுங்கள். சிங்கப்பூருக்கு மாற்றம் தேவை,” என்று கூறினார்.

மேலும் தாம் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

திரு லீ சியன் யாங், 62, கடந்த புதன்கிழமையன்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினராக அறிமுகப்படுத்தப்பட்டார். 

அது முதல் அவர் அந்தக் கட்சியின் தொகுதி உலாவில் பங்கேற்று வந்துள்ளார். ஆனால், கட்சியின் வேட்பாளராக அவர் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை.
 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online