இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்க அனுமதி

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்து விரைவில் மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.

உலக அளவில் பல நாடுகளில் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், சில நிறுவனங்கள் மட்டுமே மருந்துகளின் பரிசோதனைகளுக்கான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய தடுப்பு மருந்தாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் புனேயை தலைமையிடமாகக் கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு COVAXIN என்ற தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆய்வு மன்றம், இந்தியாவின் நேஷனல் வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்குப் பிறகு, விலங்குகளுக்குச் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை வெற்றியடைந்ததால், இந்த மருந்தை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனை தொடங்க உள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!