ஜூரோங் குழுத்தொகுதி போட்டி நிலவரம்

ஜூரோங் குழுத்­தொ­கு­தி­யில் மலை­யும் மடு­வும்­ போல மூத்த அமைச்சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் தலை­மையி­லான மசெக அணி­யும் சிங்­கப்­பூரின் ஆகப் புதிய அர­சி­யல் கட்­சி­யான ஒன்­று­பட்ட சிவப்­புப் புள்ளி (ரெட் டாட் யுனைட்­டெட்) கட்­சி­யும் மோது­கின்­றன.

திரு தர்­மன் தலை­மை­யில் 2015ல் போட்­டி­யிட்ட அணி ஆக அதிக வாக்­கு­க­ளைப் பெற்று அதாவது 79 விழுக்­காடு வாக்கு களைப் பெற்று வெற்­றி­பெற்­றது.

ஒன்­று­பட்ட சிவப்­புப் புள்ளி கட்சி இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­பு­தான் பதி­யப்­பட்ட கட்சியா­கும்.

அது போதிய வேட்­பா­ளர்­க­ளைத் திரட்டு­வ­தற்கே பெரும்­பா­டு­பட்டு இருக்­கிறது.

திரு தர்­மன், 63, அணி­யில் வர்த்­தக தொழில் மற்­றும் வெளி­யு­றவு அமைச்­சுக்­கான மூத்த நாடாளு­மன்­றச் செய­லா­ளர் டான் வு மெங், 45, முன்னாள் எம்பியான ரஹாயு மஹ்ஸாம், 39, ஆகி­யோ­ரும் ஸி யாவ் குவான், 35, ேஷான் ஹுவாங், 37, ஆகிய புது­மு­கங்­களும் இடம்­பெற்று உள்­ள­னர்.

எதிர் அணி­யில் ரவி ஃபிலமோன், 52, மிச்­சல் லீ, 43, அலெக் டோக் கிம் யாம், 55, ஆகி­யோர் உள்­ள­னர். இவர்­கள் ஏற்­கெ­னவே தேர்­தல்­களில் போட்­டி­யிட்டு இருக்­கி­றார்­கள். லியானா தமிரா, 33, நிக்­கலஸ் டாங், 28, ஆகி­யோர் இதர வேட்­பா­ளர்­கள்.