மரின் பரேட் குழுத்தொகுதி: டான் சுவான்-ஜின் அணி

மரின் பரேட் குழுத்தொ­கு­தி­யில் மன்ற நாய­கர் டான் சுவான்-ஜின் தலை­மை­யி­லான மக்­கள் செயல் கட்­சிக் குழு கள­மி­றங்கி உள்­ளது.

ஓய்­வு­பெற்ற கௌரவ மூத்த அமைச்­ச­ரான திரு கோ சோக் டோங் இல்­லா­மல் மசெக இங்கு கள­மி­றங்­கு­வது இது முதல்­முறை. திரு கோ அர­சி­ய­லில் இருந்து ஓய்வு­பெ­றுகிறார்.

டான் சுவான்-ஜின், 51, சீ கியாங் பெங், 58, எட்­வின் டோங், 50, ஆகி­யோர் மீண்­டும் தேர்­தல் களம் காணும் அதே­வேளை, முகம்­மது ஃபாஹ்மி அலி­மான், 48, டாக்­டர் டான் சீ லெங், 55, ஆகிய இரு புது­மு­கங்­களும் இத்­தொ­கு­திக்­கான மசெக அணி­யில் உள்­ள­னர்.

மசெக அணிக்கு எதி­ராக இத்­தொ­கு­தி­யில் பாட்டா­ளிக் கட்­சி­யின் ஐவர் குழு கள­மி­றங்கி உள்­ளது.

கடந்த தேர்­த­லில் நீ சூன் குழுத் தொகு­தி­யில் போட்­டி­யிட்ட ரோன் டான் ஜுன் யென், 35, இக்­கு­ழு­வுக்­குத் தலைமை ஏற்­கி­றார். முன்­னாள் தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான யீ ஜென் ஜோங், 55, அணி­யில் உள்­ளார்.

இவ்­வி­ரு­வர் தவிர, மற்ற மூவ­ரும் புது­மு­கங்­கள். வழக்­க­றி­ஞர் முகம்­மது ஃபாட்லி முகம்­மது ஃபாவ்ஸி, 40, கணி­னித் துறை நிபு­ணர் நேத­னி­யல் கோ, 36, சிறு வர்த்­தக நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் முகம்­மது அஸார் அப்­துல் லத்­திஃப், 34, ஆகி­யோர் அவர்­கள்.