களத்தில் மட்டுமே எதிரிகள்; புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதி வேட்பாளர்களின் சந்திப்பு

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் பால் தம்பையாவும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு லியாங் கெங் ஹுவாவும் இன்று (ஜூலை 1) பிரசாரத்தின்போது பங்கிட் சாலையில் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது.

அப்போது, களத்தில் மட்டுமே மோதல், தனிப்பட்ட வகையில் அல்ல என்பதை உணர்த்தும்விதமாக இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

தொகுதி உலாவின்போது, “தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியைத் துறந்துவிடுவீர்களா?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “அதன் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறைத் தலைவருடனும் பல்கலைக்கழகத்துடனும் கலந்தாலோசிப்பேன்,” என்று டாக்டர் தம்பையா பதிலுரைத்தார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online