ஜிஎஸ்டி உயர்வை ரத்து செய்க: தேர்தல் அறிக்கை வாயிலாக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி கோரிக்கை

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு அறிவிப்பைத் திரும்பப் பெறுதல், ஆள்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் அல்லது தேவை இருப்போர் தங்களது மத்திய சேம நிதிக் கணக்கில் தற்காலிகமாக பணம் எடுக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள், தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (ஜூன் 30) பதிவேற்றிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

2022-2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜிஎஸ்டி 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயர்த்தப்படும் என அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. அதனைக் கைவிட்டு, வருவாய் ஈட்ட வேறு வழிகளை அரசாங்கம் தேட வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.

பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, சிங்கப்பூர் மக்கள் கட்சி ஆகியவையும் இதேபோன்று குரல் எழுப்பியுள்ளன.

ஆள்குறைப்பு காரணமாக வேலையிழந்த உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்கள் அல்லது நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் தங்களது மசே நிதி கணக்கில் இருந்து ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் $3,000 வரை எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!