ஐந்தாண்டு திட்டங்களை முன்வைத்து வாக்கு வேட்டை

பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் அத்தொகுதியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டங்களை முன்வைத்து, வாக்கு வேட்டையாடி வருகின்றனர்.

அந்தத் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பில் திரு சீத்தோ யி பின்னும் அவரை எதிர்த்து சிங்கப்பூர் மக்கள் கட்சி சார்பாக திரு ஜோசே ரேமண்டும் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக அத்தொகுதியில் வெற்றிக்குக் குறிவைத்திருக்கும் 56 வயதான திரு சீத்தோ, மூன்று தலைமுறைக் குடியிருப்பாளர்களுக்கு ஏற்ற வகையில் தாமும் தம் குழுவினரும் பொத்தோங் பாசிரை உருமாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அங்கு ஒரு பலதுறை மருந்தகமும் குடியிருப்பாளர்களுக்கான நடவடிக்கை நிலையமும் அமைத்துத் தருவதாக உறுதியளித்த திரு சீத்தோ, நடுத்தர வயதினரும் மூத்த குடிமக்களும் மின்னிலக்கத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் திட்டங்கள் உட்பட இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்துவேன் என்றும் உறுதிகூறினார்.

இதற்கிடையே, இணையம் வழியாகத் தமது ஐந்தாண்டு திட்டத்தை முன்வைத்த திரு ரேமண்ட், 48, மனநல வசதிகளையும் உடற்குறையுள்ளோருக்கான ஆதரவையும் மேம்படுத்தும் விதமாக சமூக முதியோர் மருத்துவத் திட்டத்தை ஏற்படுத்தித் தருவதாக உறுதி அளித்தார்.

மறுசுழற்சிப் பொருட்கள் சேகரிப்புச் சேவையைத் தொடங்கி, அதை மேற்கொள்ளும் குடியிருப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

அத்துடன், குடியிருப்பாளர்களுடன் அடிக்கடி கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் திரு ரேமண்ட் வலியுறுத்தினார்.

பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் மொத்தம் 18,551 பேர் வாக்குச் செலுத்தக் காத்திருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!