வேலைகள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மீது அதிக கவனம்

கொவிட்-19 நெருக்கடிச் சூழலில் வேலைகளிலும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மீதும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நேற்றைய தொலைக்காட்சி விவாதத்தின்போது வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேரலையாக ஒளிபரப்பபட்ட அந்த விவாத நிகழ்ச்சியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் டாக்டர் விவியன், பாட்டாளிக் கட்சியின் ஜேமஸ் லிம், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சீ சூன் ஜுவான், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் பிரான்சிஸ் யுவென் ஆகியோர் பங்கேற்றனர்.

வெளிநாட்டு ஊழியர்கள், உள்ளூர் வர்த்தகங்கள், பொருளியல், சமூக முன்னேற்றம், மக்கள்தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

’பிஎம்இடி’ எனும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் வேலைக்கு வெளிநாட்டினரை வேலைக்கு எடுப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என திரு யுவென் வலியுறுத்தினார். வெளிநாட்டவர்களை, குறிப்பாக ‘பிஎம்இடி’ பிரிவினரை வேலைக்கு எடுப்பதை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக டாக்டர் சீ குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த டாக்டர் விவியன், “நம் வாழ்நாளில் கொவிட்-19 எனும் ஆகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். இவ்வேளையில், வேலைகளில்தான் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது,” என்றார்.

ஆனால், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை தேர்தல் நேர உத்தியாக டாக்டர் சீ சாடினார்.

மாறாக, வாடகையும் வெளிநாட்டு ஊழியர் தீர்வையும் கட்டுக்குள் இருப்பதும் ஆள்குறைப்பின்போது அனுகூலங்கள் கிடைப்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று திரு யுவென்னும் டாக்டர் லிம்மும் வலியுறுத்தினர்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிடும் வகையில் அவற்றுக்கு நிதி ஆதாரம் கிடைக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனங்களின் வாடகை குறைந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் லிம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் வேலைகளை வழங்குவதிலும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதை டாக்டர் விவியன் ஒத்துக்கொண்டார். அதனால்தான் வேலை ஆதரவுத் திட்டம், வாடகைத் தள்ளுபடி போன்ற திட்டங்கள் மூலமாக அத்தகைய நிறுவனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் முயன்று வருவதாக அவர் கூறினார்.

கீழ்மட்டத்தில் இருப்பவர்களைக் கைதூக்கி விடுவது, ஒவ்வொரு பள்ளியையும் சிறந்த பள்ளியாக உருவாக்குவது, எளிதில் பாதிக்கப் பட வாய்ப்புள்ள குடும்பங்களுக்கு உதவுவது போன்றவை மூலம் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்த முடியும் என்றும் டாக்டர் விவியன் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!