மக்கள் செல்வாக்கை பெற்றவர் டெஸ்மண்ட் லீ

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, 43, தொகுதி மாறி­ய­தற்­கான கார­ணத்தை தொடர்பு தக­வல் அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

திரு லீ, ஜூரோங் குழுத் தொகு­தி­யில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகு­திக்கு மாறி திரு ஈஸ்­வ­ரன் தலை­மை­யி­லான மக்­கள் செயல் கட்சி அணி­யில் இணைந்து களம் காண்­கி­றார்.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக மூடப்­பட்டு இருந்த ஜூரோங் வட்­டார நூல­கம் நேற்று மீண்­டும் திறக்­கப்­பட்­ட­போது திரு ஈஸ்­வ­ரன், 58, அங்கு வரு­கை­ய­ளித்­தார். அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் பேசி­னார்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகு­திக்கு திரு லீயால் என்ன சாதிக்க முடி­யும் என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளித்த திரு ஈஸ்­வ­ரன், “திரு டெஸ்­மண்ட் லீ, ஓர் அமைச்­ச­ராக தனது தலை­மைத்­து­வத்­தை­யும் பத்­தாண்­டு­க­ளுக்கு மேலாக தொகுதி மக்­க­ளி­டம் பெற்ற செல்­வாக்­கை­யும் அரு­கில் உள்ள இந்­தத் தொகு­தி­யில் பயன்­ப­டுத்தி பாடு­பட இருக்­கி­றார்,” என்­றார்.

வெஸ்ட் கோஸ்ட் தொகு­தி­யில் புதி­தாக போட்­டி­யி­டும் டெஸ்­மண்ட் லீயும் அங் வெய் நெங்­கும் இதற்கு முன் ஏன் வெஸ்ட் கோஸ்ட் தொகு­தி­யில் காணப்­ப­ட­வில்லை என்று கேட்­கப்­பட்­ட­தற்கு, “அவர்­கள் இரு­வ­ரும் தொகு­திப் பக்­கம் தலை­காட்­டு­வ­தன் மூலம் பிர­ப­ல­ம­டை­ய­வில்லை. மாறாக, பல்­வேறு முயற்­சி­க­ளின் மூலம் தொகு­திப் பணி ஆற்­றி­ய­தன் மூலம் செல்­வாக்கு பெற்­றுள்­ள­னர்,” என்­றார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

திரு லீ தொகுதி மாறி­ய­தன் மூலம் தஞ்­சோங் பகார் குழுத் தொகு­தி­யைப் போலவே இரண்டு முழு அமைச்­சர்­க­ளைக் கொண்ட குழுத் தொகு­தி­யாக வெஸ்ட் கோஸ்ட் இருக்­கும்.

வீதி­களில் பிர­சா­ரப் பேரணி இல்­லா­மல் வாக்­கா­ளர்­க­ளைச் சென்­ற­டை­யும் திட்­டம் குறித்து செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­போது, “எங்­க­ளது அணு­கு­முறை வெறும் ஒன்­பது நாள் பிர­சா­ரத்­தின் அடிப்­ப­டை­யி­லா­னது அல்ல. ஐந்­தாண்டு காலம் மக்­கள் பணி­யாற்­றி­ய­தைப் பொறுத்­தது அது,” என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.

வெஸ்ட் கோஸ்ட்டுக்கு மாறிய டெஸ்மண்ட் லீ பற்றி எஸ் ஈஸ்வரன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!