மசெக வேட்பாளர்கள்: அல்ஜுனிட் குழுத் தொகுதியில் கடுமையாக உழைத்துள்ளோம்

அல்ஜுனிட் குழுத் தொகுதி குறிப்பிட்ட ஓர் ஆரசியல் கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று அங்கு போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் இடையே நிகழும் போட்டியைக் காட்டிலும் மற்ற முக்கியமான விவகாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறினர். அவற்றில் கொவிட்-19 பிரச்சினையும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டது.

பாட்டாளிக் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தாலும் மக்கள் செயல் கட்சி அரசாங்கத்தின் திட்டங்களாலும் பலன் கிடைக்கும் என்ற மனப்போக்கைக் குடியிருப்பாளர்கள் கொண்டிருப்பது பற்றி மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அல்ஜுனிட் குழுத் தொகுதி பாட்டாளிக் கட்சி வசம் உள்ளது.

நேற்று காலை பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் அமைந்துள்ள உணவு அங்காடி நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அலெக்ஸ் இயோ, இதுகுறித்து பதிலளித்தார்.

“கடந்த ஒன்பது ஆண்டுகளாக அல்ஜுனிட் குழுத் தொகுதியில் எங்களது செயல்பாட்டை நீங்கள் பார்க்கலாம். எங்களுக்கு அரசாங்க நிதி ஏதும் கிடைக்காதபோதிலும் நகரமன்றம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோதும் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் நாங்கள் கடுமையாக உழைத்தோம்,” என்று திரு இயோ தெரிவித்தார்.

‘லிவிங் சேங்சுவரி பிரெத்ரன்’ தேவாலயம், அன் நயீம் பள்ளிவாசல் ஆகியவற்றில் உள்ள பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளை

களுக்கு வசதியாக கூரையுள்ள நடைபாதைகளை கட்டித் தர பாய லேபாரில் உள்ள தமது குழு தனிப்பட்ட முறையில் நிதி திரட்டியதை 41 வயது திரு இயோ சுட்டினார்.

பாலர் பள்ளிகளின் பின்வாசல்களை அருகில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக கட்டடங்களுடன் இந்த கூரையுள்ள நடைபாதைகள் இணைக்கின்றன.

குறிப்பிட்ட சிலரின் தேவைகளை மட்டும் இது பூர்த்தி செய்வதால் இதற்கு சமூக மேம்பாட்டுத் திட்டக் குழு அரசாங்க நிதியைப் பயன்படுத்த முடியாது.

“குடியிருப்பாளர்களின் தேவைகளையும் அக்கறைகளையும் புரிந்துகொள்ள கூடுதல் முயற்சி எடுப்பதே முக்கியம்,” என்றார் திரு இயோ. குடியிருப்பாளர்களுடன் பேசியும் அவர்களிடமிருந்து கருத்து சேகரித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி தெரிந்துகொள்வதாக காக்கி புக்கிட் பிரிவின் 48 வயது திரு ஷம்சுல் கமார் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவற்றுக்குத் தீர்வு காண தமது குழு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

“குடியிருப்பாளர்களுடன் தொடர்புகொள்வது மட்டுமல்ல. சுகாதாரம் முதல் வேலை வாய்ப்பு வரையிலான அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே எங்கள் இலக்கு,” என்றார் அவர்.

2015ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெறும் 50.95 விழுக்காடு வாக்குகளைப் பெற்று பாட்டாளிக் கட்சி அல்ஜுனிட் குழுத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!