சுடச் சுடச் செய்திகள்

மக்கள்தொகையை 10 மில்லியனாக உயர்த்த வேண்டும் என நான் கூறவில்லை: துணைப் பிரதமர் ஹெங்

சிங்கப்பூரின் மக்கள்தொகையைப் பத்து மில்லியனாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட வேண்டும் என்று தாம் கூறவில்லை என்றும் அப்படி ஓர் எண்ணிக்கையையே தாம் குறிப்பிடவில்லை என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவி கியட் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 1) இரவு தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட அரசியல் விவாதத்தின்போது, சிங்கப்பூரின் மக்கள்தொகையை 10 மில்லியனாக உயர்த்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் கூறியிருந்தார்.

2019 மார்ச்சில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது, சிங்கப்பூரில் மக்கள் நெருக்கம் மிகுதியாக இல்லை என்று திரு ஹெங் சொன்னதாகவும் டாக்டர் சீ குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அமைச்சுநிலை கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசியபோது சிங்கப்பூர் மக்கள்தொகை வெள்ளை அறிக்கை குறித்து தம்மிடம் கேட்கப்பட்டதாக துணைப் பிரதமர் ஹெங் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக இன்று விளக்கமளித்தார்.

“அதற்குப் பதிலளித்தபோது, மக்கள்தொகை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமைத் திட்ட வரைவாளர் லியூ தாய் கெர் வெளிப்படையாகச் சொன்னதைக் குறிப்பிட்டேன். ஆனால், அதை நான் ஒப்புக்கொள்ளாததோடு, நமது மக்கள்தொகையானது நிலப் பரப்பளவை மட்டுமின்றி, சமூகவெளியையும் ஒற்றுமை உணர்வை எப்படிப் பாதுகாப்பது என்பதையும் சார்ந்துள்ளது என விளக்கினேன்,” என்று நினைவுகூர்ந்தார் நிதியமைச்சருமான திரு ஹெங்.

“சிங்கப்பூர் மக்கள்தொகையைப் பத்து மில்லியனுக்கு உயர்த்த அரசாங்கம் ஒருபோதும் முன்மொழியவும் இல்லை, இலக்கு கொண்டிருக்கவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். 

இதனிடையே, தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ள முக்கியமான ஓர் அம்சமே தவறாக இருப்பது வெட்டவெளிச்சமாகி விட்டதை அடுத்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போதே, டாக்டர் சீயின் பத்து மில்லியன் மக்கள்தொகை என்ற கூற்றில் உண்மையில்லை என மக்கள் செயல் கட்சி சார்பில் அதில் பங்கேற்ற டாக்டர் விவியன் ஆணித்தரமாக மறுத்திருந்தார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon