டான் செங் போக்: தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தந்தால் ஏற்கமாட்டேன்

கூடுதல் தொகுதயில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் கொண்டிருக்கும் திட்டத்தை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக் சாடியுள்ளார். வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பதைத் தடுக்கவே மக்கள் செயல் கட்சி இந்தச் சூழ்ச்சியைச் செய்வதாக டாக்டர் டான் கூறினார்.

தேர்தலில் தாம் அதிக வாக்குள் பெற்று தோற்கும்பட்சத்தில் தமக்கு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டாலும் அதை ஏற்கப்போவதில்லை என்று அவர் இன்று (ஜூலை 2) உறுதி செய்தார்.

ஆனால் தமது கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் அப்பொறுப்பை ஏற்க விரும்பினால் அவ்வாறு செய்வதற்குத் தடை ஏதுமில்லை என்றார் அவர்.

இயோ சூ காங் தனித் தொகுதியில் உள்ள சந்தை ஒன்றில் அத்தொகுதியில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் கேலா லோவுடன் டாக்டர் டான் இன்று தொகுதி உலா மேற்கொண்டபோது இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“வலுவான அடித்தளம் இல்லாவிடில் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படுவது சிரமம். பெயருக்கு மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடாது. தேர்தலில் வெற்றி பெற்று முறையான, உண்மையான நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும்,” என்று டாக்டர் டான் தெரிவித்தார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!