டான்: வெளிப்படைத்தன்மை இல்லாததால் மக்கள்தொகை குறித்த கேள்வி எழுந்துள்ளது

10 மில்லியன் மக்கள்தொகை விவகாரம் எழுந்திருப்பதற்கு அரசாங்கத்திடம் வெளிப்படைத்தன்மை இல்லாததே காரணம் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் தெரிவித்துள்ளார்.

“தரவுகளை வெளியிடாவிட்டால் மக்கள் ஊகிக்கத் தொடங்குவர். ஏனென்றால் அவர்களுக்கு உண்மையான தரவுகள் பற்றி தெரியாது. தரவுகள் தொடர்பில் அராசாங்கம் வெளிப்படையான முறையைக் கையாளவில்லை,” என்று சுவா சூ காங் குழுத் தொகுதியில் நேற்று தொகுதி உலா மேற்கொண்டபோது செய்தியாளர்களிடம் டாக்டர் டான் தெரிவித்தார். அரசாங்கம் நியாயமான, சரியான விளக்கமளித்தால் 10 மில்லியன் மக்கள்தொகைக்கு மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை என்றார் அவர்.

“10 மில்லியன் மக்கள்தொகை தேவை என்று வெளிப்படையாகக் கூறுங்கள். அதற்கான காரணத்தையும் கூறுங்கள். அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் முடிவைத் தெரிவிப்பர். ஆனால் அரசாங்கம் அதற்கான தரவுகளை வெளியிட வேண்டும். அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சமாக தரவுகளைத் தராதீர்கள்.,” என்று டாக்டர் டான் தெரிவித்தார்.

இதற்கிடையே, 10 மில்லியன் மக்கள்தொகை தொடர்பான விவகாரத்தை வைத்துக்கொண்டு வாக்காளர்களை மக்கள் செயல் கட்சி திசை திருப்பப் பார்ப்பதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவரான பேராசிரியர் பால் தம்பையா தெரிவித்துள்ளார்.

மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே 10 மில்லியன் மக்கள்தொகை தொடர்பான விவகாரம் குறித்து நிலவும் கருத்து மோதல் குறித்து அவரிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பேராசிரியர் பால் தம்பையா, மக்கள் செயல் கட்சி அல்லது சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கூறுவதைப் பொதுமக்கள் அப்படியே நம்பிடாமல் அந்தந்த விவகாரங்கள் குறித்து அவர்களே படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

மக்கள்தொகை தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட அறிக்கை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானதாகவும் அதைப் பற்றி தெளிவுப்படுத்த அன்றிலிருந்து மக்கள் செயல் கட்சிக்குப் பல வாய்ப்புகள் இருந்ததாகவும் பேராசிரியர் பால் தம்பையா தெரிவித்தார்.

“ஆனால் மக்கள்தொகை குறித்து இவ்வளவு நாட்களாக பதிலளிக்காமல் தற்போது அரசாங்கம் இவ்விவகாரம் குறித்து பதில் அளித்துள்ளது. மக்கள்தொகை 10 மில்லியனுக்கு உயர்த்தப்படாது என்று மக்கள் செயல் கட்சி இப்போதுதான் கூறியிருக்கிறது,” என்றார் பேராசிரியர் பால் தம்பையா.

மக்கள் தொகையை அரசாங்கம் 10 மில்லியனுக்கு உயர்த்தப்போகிறது என்பது தவறான புரிதலாக இருந்திருந்தாலும் அதுகுறித்து தெளிவுப்படுத்த அரசாங்கத்துக்கு பல வாய்ப்புகள் இருந்தன,” என்று அவர் கூறினார்.

இதே கருத்தைத்தான் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்தார்.

“மக்கள்தொகை குறித்து பொதுத் தேர்தலுக்கு முன்பே அரசாங்கம் தெளிவுப்படுத்தியிருக்கலாம். மக்கள்தொகை பற்றி அரசாங்கம் தெளிவான விவரங்களை வெளியிட்டிருக்க வேண்டும்,” என்றார் திரு பிரித்தம் சிங்.

“‘நமது அமைச்சர்கள் முன்பு அதிகமான மக்கள்தொகை குறித்து கோடிகாட்டியுள்ளனர். இந்த நிலையில், அதுபற்றிய நியாயமான விமர்சனம் எழும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!