தேர்தல் செய்திக்கொத்து 4-7-2020

தேர்தல் பிரசார சுவரொட்டிகள் சேதம்: ஆடவர் கைது; சிறுவனிடம் விசாரணை

தேர்தல் பிரசார சுவரொட்டிகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 51 வயது ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு 1.50 மணியளவில் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5ல் உள்ள சாலை ஒன்றின் மின்கம்பத்தின் கீழே சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் பிரசாரச் சுவரொட்டி சேதப்படுத்தப்பட்டிருப்பது போலிஸ் கவனத்துக்குச் சென்றது. அதே சாலையில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்தது குறித்து அந்தக் கட்சிபோலிசில் புகார் அளித்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய ஜூரோங் போலிஸ் பிரிவு அதிகாரிகள் சுவரொட்டியைச் சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 51 வயது ஆடவரை வியாழக்கிழமை பின்னிரவு 1.50 மணியளவில் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில், மக்கள் செயல் கட்சியின் சுவரொட்டிகள் ஹவ்காங் அவென்யூ 10ல் சேதப்படுத்தப்

பட்டிருப்பதாகக் கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் இறங்கிய அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் 13 வயது சிறுவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆடவர், சிறுவன் ஆகிய இருவரிடமும் விசாரணை தொடர்வதாக போலிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.


மக்கள் குரல் கட்சிக்கு பொஃப்மா அலுவலகத்தின் திருத்த உத்தரவு

திருத்தம் வெளியிடுமாறு மக்கள் குரல் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்திற்கும் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் தியனின் ‘யூடியூப்’ தளத்துக்கும் ‘பொஃப்மா’ எனப்படும் பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த புதன்கிழமை வெளியான மக்கள் குரல் கட்சியின் ஃபேஸ்புக்கில் நேரலை காணொளி தொடர்பானவை அந்த உத்தரவுகள்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு அரசாங்கம் செலவிடுவது தொடர்பாக அந்த காணொளியில் உண்மைக்கு மாறான தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொஃப்மா அலுவலகம் கூறியது.

இந்த காணொளியை திரு லிம் தியன் தமது யூடியூப் தளத்தில் பதிவேற்றினார். திருத்த உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கல்வி அமைச்சருக்கான மாற்று அதிகாரி கேட்டுக்கொண்டதாக வியாழக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் பொஃப்மா அலுவலகம் குறிப்பிட்டது. இதே விவகாரம் தொடர்பாக பொய்த் தகவல் வெளியிட்டதற்காக கடந்த டிசம்பர் மாதமும் திரு லிம்முக்கு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.


நகர மன்றத்தை நிர்வகிக்கத் தயார்: தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் நகர மன்றத்தை நிர்வகிக்க தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் முகம்மது ரிட்சுவான் நேற்று தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தெம்பனிஸ் குழுத் தொகுதியிலும் செம்பவாங் குழுத் தொகுதியிலும் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறது.

“நகர மன்றத்தை நிர்வகிக்கத் தயாராக இருக்கிறோம். எங்கள் வேட்பாளர்்கள் அனைவரும் வெவ்வேறு பின்னணிகள், திறன்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். நானும் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். குடியிருப்பாளர் குழுவில் முக்கிய பதவியில் இருக்கிறேன்,” என்று திரு ரிட்சுவான் தெரிவித்தார்.

இருப்பினும், தங்களைப் பற்றி வாக்காளர்களிடம் தெரிவிப்பதில் சவால்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

தொகுதி மீது தமது கட்சி கொண்டிருக்கும் கடப்பாடு குடியிருப்பாளர்களுக்குத் தெரியவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.


வேலைவாய்ப்புகள், பொருள் சேவை வரி பற்றி ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு என வரும்போது சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அது அதில் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பொருள், சேவை வரியை உயர்த்தக்கூடாது என தனது நிலைப்பாட்டைத் தேர்தல் அறிக்கை மூலம் அது வாக்காளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி ஜூரோங் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!