‘மூன்று எதிர்க்கட்சிகள் இணைந்தால் மாற்று அரசாங்கம் உருவாகலாம்’

மூன்று பெரிய எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்தால் மாற்று அரசாங்கத்தை அமைக்கும் சாத்தியம் ஏற்படலாம் என்று மக்கள் செயல் கட்சியின் இரண்டாம் உதவித் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ‘எஸ்பிஎச்’ சீன செய்திக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் பேசிய வர்த்தக தொழில் அமைச்சருமான திரு சானுடன், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் திருவாட்டி ஹேசல் புவாவும் பாட்டாளிக் கட்சியின் திரு கென்னத் ஃபூவும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சான், தஞ்சோங் பகார் குழுத் தொகுதியிலும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் துணைத் தலைவரான திருவாட்டி ஹேசல் புவா வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியிலும் திரு ஃபூ ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மாண்டரின் மொழியில் பேசிய திரு சான், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, பாட்டாளிக் கட்சி ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகள் பற்றி கருத்துரைக்கையில், “மசெகவின் கண்ணோட்டத்தில் அவர்களை நாங்கள் எதிர்க்கட்சிகள் என்று பார்க்கவில்லை. ஜூலை 10ஆம் தேதிக்குப் பிறகு புதிய அரசாங்கத்தை அமைக்கக்கூடியவர்களாக அவர்களைப் பார்க்கிறோம்.

“மூன்று பெரிய எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்தால் அவர்கள் மாற்று அரசாங்கத்தை அமைக்கக்கூடும். இதுபோன்ற நிலைமை மற்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கலாம். அந்த வகையில்தான் நான் அவர்களின் கொள்கைகளை மிகவும் கவனமாக ஆராய்ந்தேன்,” என்றார்.

எதிர்க்கட்சிகள் மாற்று அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு உள்ளது என்று திரு சான் கூறிய கருத்து மிகைப்படுத்தி கூறப்பட்டது என்று திருவாட்டி ஹேசல் புவா கூறினார்.

“கடந்த சில தேர்தல்களில் அநே கமாக அனைத்து இடங்களுக்கும் போட்டி இருந்து வருகிறது. தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், மசெக 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றியதை நாம் பார்த்திருக்கிறோம். ஆகவே, முன்கூட்டியே மாற்று அரசாங்கம் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை.

“நாடாளுமன்றத்தில் போதிய எண்ணிக்கையில் எதிர்த்தரப்பு குரல்கள் இல்லை என்பதுதான் எங்களின் வாதம்,” என்றும் திருவாட்டி புவா சொன்னார்.

பயமுறுத்த வேண்டாம்

இதற்கிடையே, மாற்று அரசாங்கம் பற்றி திரு சான் கூறிய கருத்துக்கு நேற்று பதிலடி கொடுத்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக், “எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி அரசாங்கம் அமைப்பது பற்றி கூறி சிங்கப்பூரர்களைப் பயமுறுத்த வேண்டாம்,” என்றார்.

டெக் வாய் லேனில் உள்ள வீவக வீடுகளுக்கு வருகை தந்த டாக்டர் டான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மக்களை ஒருமுறை முட்டாளாக்கலாம். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது. முன்பு ஒருமுறை அவர்கள் அவ்வாறு கூறியிருக்கிறார்கள்.

“வாக்களிப்பு தினத்துக்கு அடுத்த நாள் நீங்கள் கண்விழித்து பார்க்கையில், மசெக சிங்கப்பூரை ஆளும் கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்திருக்கக்கூடும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

“இதுபோன்ற பேச்சைக் கேட்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை. காரணம் இதுபோன்று இங்கு நடைபெறும் சாத்தியம் மிகவும் குறைவு. என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு அரசியல் சூழ்ச்சி,” என்று கருத்துரைத்தார்.

மேலும் பேசிய டாக்டர் டான், “சிங்கப்பூரை ஆளுவதற்கு அரசியல் கட்சிகள் மட்டும் போதாது. அதில் பொதுச் சேவையின் பங்களிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுச் சேவை அதிகாரிகள் நாட்டைச் சிறப்பாகப் பார்த்துக்கொள்வார்கள். உலகின் தலைசிறந்தவர்களில் சிங்கப்பூர் பொதுச் சேவை அதிகாரிகளும் அடங்குவர்,” என்றும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!