துடிப்புடன் மூப்படைதல், தரமான கல்வி முறை: இணைய பிரசாரத்தில் வலியுறுத்திய மசெக

ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணிக்கு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தலைமை தாங்குகிறார். இந்த அணி நேற்று இணையம்வழி பிரசாரம் செய்தது.

இப்பிரசாரம் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திரு ஹெங்குடன் அவரது அணியைச் சேர்ந்த திருவாட்டி ஜெசிக்கா டான், திருவாட்டி ஷெரில் சான், டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், புதிய வேட்பாளர் டான் கியெட் யாவ் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

தொகுதிக்கான திட்டங்களில் வேட்பாளர்கள் கவனம் செலுத்தினர். குறிப்பாக, அவர்களது பிரசாரத்தில் மூத்தோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் மூப்படைவதற்கான முக்கியத்துவம் குறித்து இணையம்வழி பிரசாரத்தில் கலந்துரையாடப்பட்டது.

சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருவதை மக்கள் செயல் கட்சியின் உதவி தலைமைச் செயலாளருமான திரு ஹெங் சுட்டினார்.

உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சமூகரீதியாகவும் துடிப்புடன் மூப்படைவது அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

“நமது மூத்தோர் மிகச் சிறந்தமுறையில் மூப்படைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

“இந்தத் திட்டத்தை மேலும் சிறப்பாக நடத்த நாடெங்கும் இதற்கான உயர்தரமிக்க திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று துணைப் பிரதமர் ஹெங் கூறினார். இளம் பெற்றோர் பற்றியும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் இணையம்வழி பிரசாரத்தில் பேசினர்.

இளையர்கள் தரமான கல்வி முறையை வழங்குவதன் முக்கியதுவத்தை அவர்கள் கோடிகாட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!