‘நியமன உறுப்பினர் குரலை அலட்சியப்படுத்த முடியும்’

நாடாளுமன்றத்தில் தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரலை அலட்சியப்படுத்திவிட முடியும் என்றும் ஆனால் மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களின் குரலை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் பாட்டாளிக் கட்சி வேட்பாளர் லியோன் பெரேரா தெரிவித்து இருக்கிறார்.

மக்கள் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரலைச் செவிமடுக்க ஆளும் மக்கள் செயல் கட்சி அரசாங்கம் தவறிவிடுமானால் அந்தக் கட்சி வாக்குகளை இழந்துவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று ஃபேஸ்புக் பக்கத்தில் திரு பெரேரா குறிப்பிட்டார்.

ஆனால் தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினரைப் பொறுத்தவரையில் இப்படி நிகழ வாய்ப்பு இல்லை என்றார் அவர்.

திரு பெரேரா அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

முந்தைய நாடாளுமன்றத்தில் தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினராக இவர் சேவையாற்றி இருக்கிறார்.

வாக்காளர்கள் மக்கள் செயல் கட்சிக்கு வாக்களித்தாலும் தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பு இருக்கும் என்று பிரசாரம் செய்யப்படுவதற்குப் பதிலளிக்கும் வகையில் திரு பெரேரா இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

வரும் தேர்தலில் மசெக எல்லா இடங்களில் வென்றாலும் நாடாளுமன்றத்தில் தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினர் முறை நீட்டிக்கப்பட்டு அதன்மூலம் 12 எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் சென்ற செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மக்கள் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தொகுதியில்லாத உறுப்பினர்களுக்கும் முழு வாக்குரிமை இருக்கும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

இருந்தாலும் தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகர மன்றத்தை நிர்வகித்து நடத்த முடியாது என்பதால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைப் போல அதே வழிகளில் மக்களை ஈடுபடுத்த முடியாது என்று பெரேரா குறிப்பிட்டார்.

எதிர்த்தரப்பு பற்றி ஆளும் மக்கள் செயல் கட்சி பிரமுகர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளுக்கும் திரு பெரேரா நேற்று பதிலளித்தார்.

கொவிட்-19 கிருமிப் பரவலைச் சமாளிப்பது தொடர்பிலும் கொவிட்-19க்கு பிந்தைய உலகம் தொடர்பிலும் ஒரு முழு அத்தியாயத்தையே பாட்டாளிக் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஒதுக்கி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 கிருமியைக் கையாளுவதற்குத் திட்டம் எதுவும் எதிர்த்தரப்பிடம் இல்லை என்று மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லீ சியன் லூங் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த திரு பெரேரா, நாடாளுமன்றத்தில் கொவிட்-19 தொற்றை ஒழிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய விவாதங்களில் பாட்டாளிக் கட்சி தீவிரமாக ஈடுபட்டதாகக் கூறினார்.

பாட்டாளிக் கட்சி, மக்கள் செயல் கட்சியின் நிழல் கட்சியைப் போல் செயல்படுகிறது என்று பிரதமர் திரு லீயும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் தெரிவித்தது பற்றி கருத்து கூறிய திரு பெரேரா, பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான பிரித்தம் சிங் முன்பு தெரிவித்ததைச் சுட்டினார்.

தன் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருக்கும் திட்டங்களை மக்கள் செயல் கட்சி அமல்படுத்துவதை தான் வரவேற்பதாக பிரித்தம் சிங் குறிப்பிட்டு இருந்தார். ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்வது, ஊடகச் சீர்திருத்தம், நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவது முதலானவை இவற்றில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!