‘மசெகவிடம் வெற்றிக்கான வழிமுறை இல்லை’

மக்கள் செயல் கட்சியிடம் சிங்கப்பூருக்கான வெற்றி வழிமுறை இல்லை என்று ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சியின் ஜூரோங் குழுத்தொகுதி வேட்பாளர் அணி தெரிவித்துள்ளது.

கட்டிக்காக்க முடியாத, சிங்கப்பூரர்களுக்குப் பாதகமான கொள்கைகளைப் பயன்படுத்தி மசெக தன் வெற்றியை உறுதிப்படுத்தி வந்திருக்கிறது என்று அந்தக் கட்சி நேற்று நடந்த தொகுதி அரசியல் ஒளிபரப்பில் குறிப்பிட்டது.

இது சரியானது அல்ல என்று அக்கட்சியின் தலைவி திருவாட்டி மிஷல் லீ தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும் மக்களையும் அவர்களின் வாழ்வையும் மனதில் கொள்ள இது தக்க தருணம் என்று கட்சி நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். குடியிருப்பாளர்களைக் கூடுமான வரையில் தலைசிறந்த முறையில் பிரதிநிதித்து அவர்களுக்குத் தானும் தன் சக வேட்பாளர்களும் குரல்கொடுக்கப் போவதாக திருவாட்டி லீ குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில் ஜூரோங் குழுத்தொகுதியில் மட்டும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி தனது அணியைக் களமிறக்கி இருக்கிறது. திருவாட்டி லீ தெரிவித்த கருத்துகளைப் பிரதிபலித்த வேட்பாளர்களில் ஒருவரான நிக்கலஸ் டாங், சிங்கப்பூரர்கள் தங்கள் மசே நிதி சேமிப்பை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது, ஒற்றையர்கள் வீவக வீட்டை வாங்குவதற்கான வயதைக் குறைப்பது போன்றவற்றுக்காகப் பாடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

இக்கட்சியின் தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமோன் தமிழில் தன் கட்சித் திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தார். வேறு ஒரு வேட்பாளரான அலெக் டோக் மாண்டரின் மொழியில் பிரசாரம் செய்தார். குமாரி லியானா தமிரா, மலாய் மொழியில் பேசி ஆதரவு திரட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!