‘மசெக அரசு வேண்டுமென்றால் எதிர்த்தரப்புக்கு வாக்களிக்காதீர்கள்’

தங்களுக்குச் சிறப்பாக சேவையாற்றிக்கொண்டிருக்கும் ஓர் அமைப்பு முறையை சிங்கப்பூரர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது.

குறிப்பாக, இந்த நெருக்கடி காலத்தில், கொவிட்-19 கிருமித்தொற்று சூழலை மக்களின் முழு ஆதரவுடன் கையாளக்கூடிய ஆற்றல்மிக்க அரசாங்கம்தான் சிங்கப்பூருக்குத் தேவை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

“உலக நாடுகளில் மாறுபட்ட அரசியல் கருத்துகளின் விளைவாக அரசாங்கம் அடிக்கடி மாற்றப்படுவதை வாக்காளர்கள் கவனிக்க வேண்டும். மக்கள் செயல் கட்சிக்கு மாற்று அரசாங்கமாகத் தாங்கள் இருப்பர் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதைக் கேட்டு மக்கள் ஏமாறக்கூடாது என்று அவர் எச்சரித்தார்.

“ஓர் அரசாங்கம் கவிழ்ந்த பின், தொடர்வது புதிய, மேலும் நிலையான அரசாங்கமாக இருக்காது. மாறாக, அடிக்கடி அரசாங்க மாற்றமும் பிளவுபடுத்தும் அரசியலும்தான் இடம்பெறும்.

“விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்வதுபோல மக்களுக்கு தோன்றும். அப்படி அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தால், காலப்போக்கில் பார்த்தால் அது முன்பு இருந்தது போலத்தான் காட்சியளிக்கும். இப்படிப்பட்ட நாடுகள் சிங்கப்பூரைக் காட்டிலும் சிறப்பாக செய்துள்ளன என்று கூற முடியாது,” என்று மசெகவின் தலைமைச் செயலாளருமான திரு லீ விவரித்தார்.

“ஆக, நான் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அதிகமாக தெரிவுகள் இருப்பது முக்கியம் என்று சொல்வோரின் வார்த்தைகளை நம்பி விடாதீர்கள். அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் தெரிவுகளை உற்றுப் பாருங்கள். அவர்கள் கூறுவதைப்போல நடந்துகொள்வார்களா என்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களின் வார்த்தைகளுக்கு மயங்கிவிடாதீர்கள். உங்கள் எதிர்காலம் அதில் அடங்கியுள்ளது,” என்றார்.
சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு ஐந்து நாட்களுக்கு முன் திரு லீ நேற்று நடைபெற்ற மெய்நிகர் ‘ஃபுல்லர்ட்டன்’ தேர்தல் பிரசாரத்தில் இவ்வாறு பேசினார்.

மத்திய வர்த்தக வட்டாரத்தில், ஃபுல்லர்ட்டன் சதுக்கத்துக்கு அருகே மசெக காலங்காலமாக, பொதுத் தேர்தல் களத்தின் மத்தியில் பகல்நேர தேர்தல் பிரசாரம் நடத்தி வந்துள்ளது. இப்போது கொவிட்-19 நிலவரம் காரணமாக அது மெய்நிகர் பிரசாமாக நடத்தப்பட்டது.

1959 தேர்தலுக்குப் பிறகு உரு வான மசெக அரசாங்கம் இதுவரை தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பதைச் சுட்டிய பிரதமர் லீ, “தேசிய கருத்துக்கும் எதிர்காலம் குறித்த நமது மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கைக்கும் பிரதிநிதியாக மசெக இருந்ததால் முக்கியமான முதலாவது தேர்தலில் வெற்றி பெற்றது. 60 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்நிலையில் மாற்றமில்லை,” என்றும் கோடிக்காட்டினார்.
“மசெக விரிவான வகையில் மக்கள் தொகையில் ஒவ்வொருவரையும் எட்டி வருகிறது. நமது கொள்கைகள் மக்களின் வாழ்வை மேம்படுத்தியுள்ளது, மக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காத்து வருகிறோம், கட்சியை மேலும் துடிப்பானதாக்க நமது தலைமைத்துவத்தைப் புதுப்பித்து வருகிறோம்,” என்று கூறினார் திரு லீ.

மசெக ‘அரசியல் புதுப்பிப்பில்’ நம்பிக்கை கொண்டுள்ளது, ‘அரசியல் மறுசுழற்சியில்’ அல்ல என்றும் தேர்தல் அறிக்கையில் அடுத்த கட்ட திட்டங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
“ஆனால், இத்திட்டங்களை செயல்படுத்த மசெகவுக்கு மக்களின் ஆதரவு தேவை. ஆகவே, மசெகவுக்கு வாக்களியுங்கள்,” என்று சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார் பிரதமர்.
இதுவே தேர்தல் களத்தில் இறக்கப்படும் ஆக வலிமையான மசெக குழு என்றும் அவர் சுட்டினார்.
“எதிர்க்கட்சிகள் கூறும் வாக்குறுதிகளைக் கேட்டு குழப்பமடையாதீர்கள். உங்களையும் உங்கள் தொகுதியையும் உங்கள் நகர மன்றத்தையும் கவனித்துக்கொள்ள உங்களுக்குத் தேவை ஒரு மசெக எம்.பி. சிங்கப்பூரைத் தொடர்ந்து வெற்றிகரமாக வழிநடத்துவதற்குத் தேவை ஒரு மசெக அரசாங்கம்,” என்று பிரதமர் லீ தமது உரையில் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!