கைகோத்து வாக்குகளை சேகரித்த இரு எதிர்க்கட்சிகள்

பொதுத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. தேர்தல் பிரசாரமும் இரண்டு நாட்களில் ஓயவிருக்கிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளில் சில கைகோத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நண்பர்களுடன் சேர்ந்து சிங்கப்பூர் ஜனநாயக் கூட்டணி நேற்று வாக்குகளைச் சேகரித்தது. இந்தத் தொகுதியில் முதல் முறையாக மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 72.89 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இதே தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி 27.11 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதாகக் கூறி வருகிறது.இம்முறை மக்கள் செயல் கட்சியை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியும் மக்கள் குரல் கட்சியும் போட்டியிடுகின்றன. இதனால் இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பு மக்கள் குரல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளுமே போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தன. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்கு வாதத்தில் முடிந்தது.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியில் மும்முனைப் போட்டியைத் தவிர்க்கும் சாத்தியம் குறித்து கலந்தாசிப்பதற் காக மக்கள் குரல் கட்சித் தலைவர் லிம் தியனுக்கு தமது கட்சி தகவல் அனுப்பியதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் திரு லிம் குறிப்பிட்டார்.

ஆனால் வேட்புமனு தாக்கல் தினத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய லிம் தியன், சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் டெஸ்மண்ட் லிம் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று தம்மிடம் கூறியதாக சொன்னார். இதற்கு தாம் சம்மதிக்கவில்லை என்றும் மக்கள் செயல் கட்சிக்கு தமது கட்சி மிகப்பெரிய மிரட்டலாக விளங்குகிறது என்றும் லிம் தியன் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூர் ஜனநாயக் கூட்டணியின் திரு லிம், நேற்று நடந்த சந்திப்பில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதையே டாக்டர் டானிடம் வலியுறுத்தியாகக் கூறினார். “ஒரே மாதிரியான இலக்கு களைக் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறோம். ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக பல கட்சிகள் ஒரே இடத்தில் போட்டியிடுவதால் ஒரு பயனுமில்லை,” என்றும் தான் கூறியதாக லிம் தெரிவித்தார்.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த பிரச்சினை தீராத தால் அவ்விரு கட்சிகளுமே விட்டுக் கொடுக்காமல் போட்டி களத்தில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியும் பாசிர் ரிஸ் - பொங்கோல் தொகுதியில் நேற்று ஒன்றாகச் சேர்ந்து வாக்கு களைச் சேகரிக்கும் பணியில் ஈடு பட்டன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு டான் செங் போக், பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி ஈடுபட்டு வருவதால் கொவிட்-19 பரவலில் கவனம் செலுத்தவில்லை என்ற புதிய புகாரை முன்வைத்தார்.

கிருமிப் பரவலைத் தடுக்கும் திட்டம் எதுவும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்று பிரதமர் கூறியிருந்த தையும் அவர் மறுத்தார்.

பொதுத் தேர்தலில் தீவிர கவனம் செலுத்தினாலும் கொவிட்-19ல் பிரச்சினையிலிருந்து எங்களு டைய கவனம் சிதறவில்லை என்று தான் கருதுவதாக டான் செங் போக் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!