மசெகவின் புதிய வேட்பாளர் ஹேனி சோவுக்கு கால் முறிவு

மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதிக்கான மசெக அணியில் போட்டியிடும் புதுமுகம் ஹேனி சோ (33), கீழே விழுந்ததில் அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. வீடு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களைச் சந்திப்பதற்காக இங்குமங்கும் ஓடியதில் தவறி விழுந்து தம் இடது காலை முறித்துக் கொண்டதாக அவர் நேற்று முன்தினம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அடுத்த சில நாட்களில் வீடுகளுக்குச் சென்று குடியிருப்பாளர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும் காப்பிக் கடைகள் போன்ற பொது இடங்களில் அவர்களைச் சந்தித்துப் பேச விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.