‘மக்கள் நலன்களை உறுப்பினர்கள் பிரதிநிதிக்க வேண்டும்’

மவுண்ட் பேட்டன் தனித் தொகுதியில் மக்கள் குரல் கட்சி சார்பில் போட்டியிடும் சிவகுமரன் செல்லப்பா

மக்கள் நலன்களுக்கும் ஆர்வத்துக்கும் முன்னுரிமை அளித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்று மவுண்ட் பேட்டன் தனித் தொகுதியில் மக்கள் குரல் கட்சி சார்பில் போட்டியிடும் சிவகுமரன் செல்லப்பா கூறியுள்ளார். சிங்கப்பூரில் எழுபது, எண்பதுகளில் வளர்ந்தபோது சிங்கப்பூரர்கள் பொருளியல் ரீதியில் ேமம்பட்டு வந்ததைக் காண முடிந்தது. ஆனால் 90களின் பிற்பகுதியிலும் நூற்றாண்டைக் கடந்தபோதும் நிலைமை மாறிவிட்டது. முக்கிய நோக்கத்திலிருந்து சிங்கப்பூர் விலகியதற்கான பதில் இன்னமும் கிடைக்கவில்லை என்றார் அவர்.

தானும் தனது கட்சியும் மக்களுக்கு முன்னுரிமை வழங்க விரும்புவதாக அவர் கூறினார்.

தனியார் துறையில் கல்வி கற்பித்து வரும் சிவகுமரன் செல்லப்பா, கணிதத்தை முக்கிய பாடமாக கற்பித்து வருகிறார்.