‘துணைப் பிரதமர் ஹெங் கூறிய சொற்கள் தாக்குதல் அல்ல’

சீனர் அல்லாத பிரதமருக்கு சிங்கப்பூர் தயாராக இருக்கிறதா என்ற கேள்விக்கு சென்ற ஆண்டு மசெகவின் முதலாம் உதவித் தலைமைச் செயலாளரான ஹெங் சுவீ கியட், இளைய தலைமுறை அல்லாதோருக்கு அது கவரக்கூடியதாக இருக்காது என்று பதிலளித்திருந்தார். இதன் தொடர்பில் போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கூறியது தாக்குதல் அல்ல என்று அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் நேற்று தெளிவுபடுத்தியது.