விவியன்: சேமிப்பு வருவாயில் பாதி எதிர்காலத்துக்கு தேவை

சிங்கப்பூர் தன்னுடைய சேமிப்பை பலவற்றிலும் முதலீடு செய்துள்ளது. அதிலிருந்து கிடைக்கக்கூடிய வருவாயில் பாதியை இப்போதைய தலைமுறைக்காகச் செலவிடலாம். மீதிப் பாதியை வருங்கால தலைமுறைக்குச் சேமிக்க வேண்டும். இது ஒரு நியாயமான ஏற்பாடு என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்ட காணொளியில் பேசிய ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி (மசெக) அணிக்குத் தலைமை வகிக்கும் டாக்டர் விவியன், “நிகர முதலீட்டு வருவாய் பங்களிப்பிலிருந்து 50 விழுக்காட்டுத் தொகையை அரசாங்க வரவு செலவுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியாது. அப்படி என்றால் அந்தத் தொகை என்னவாகும்? அதை ஏன் சிங்கப்பூரர்களுக்குப் பிரித்து கொடுக்கக்கூடாது?” என்று குடியிருப்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, பாட்டாளிக் கட்சி போன்ற பல்வேறு எதிர்க்கட்சிகள் நாட்டின் நிகர முதலீட்டு வருவாய் பங்களிப்பின் உச்சவரம்பை உயர்த்துவதன் மூலம் அதிலிருந்து கிடைக்கும் தொகையை சமூக நிகழ்ச்சிகளுக்கும் இதர திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று யோசனை கூறியுள்ளன.

சிங்கப்பூரின் பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) 2021ஆம் ஆண்டு இறுதி வரைக்கும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அதனை ஈடுகட்ட, பயன்படுத்தப்படாத நிகர இருப்பு முதலீட்டு வருமானமான $18.6 பில்லியன் தொகையிலிருந்து $13.3 பில்லியன் தொகையைச் செலவழிக்கலாம்.

அசல் தொகையைத் தொடாமலேயே நிலையான வைப்புத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாயைக் கொண்டு அதை ஈடுகட்டலாம் எனும் யோச னையை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி முன்வைத்துள்ளது.

பாட்டாளிக் கட்சி, நிகர முதலீட்டு வருவாய் பங்களிப்பு தொடர்பான செலவு வரம்பை 60 விழுக்காட்டுக்கு உயர்த்தலாம் என்று யோசனை கூறியுள்ளது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியோ அந்த செலவு வரம்பு எந்த அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்றும் டாக்டர் விவியன் சுட்டினார்.

மழைக்காலத்துக்கு சேமிப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பது பற்றி குறிப்பிட்ட அமைச்சர், “தற் போதைய கொவிட்-19 தொற்று நோய் நாட்டின் நிதி இருப்பில் கைவைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னோடித் தலைமுறையினரும் மெர்டேக்கா தலைமுறையினரும் தாங்கள் சம்பாதித்ததிலிருந்து குறைவாகவேசெலவழித்திருக்கிறார்கள். அதனால்தான் நாட்டின் நிதி இருப்பில் குறிப்பிடத்த தொகையை நம்மால் சேமிக்க முடிந்துள்ளது,” என்றார்.

தமது சொந்த கதையை இதற்கு உதாரணமாகக் கூறிய அமைச்சர், “சிறு வயதிலிருந்தே ஏழ்மையில் வாடிய என் தாயார், கிடைக்கும் சிறிய தொகையைச் செலவழிக்காமல் அதிலிருந்து ஒரு பகுதியைச் சேமித்து வைத்தார். தாம் மரணவாசலில் இருப்பதை அறிந்த அவர், தமது பேரப்பிள்ளைகளுக்காக பணத்தை ஒதுக்கி வைத்திருந்தார். தமக்காக செலவழிக்காமல் தமது வருங்கால சந்ததிக்காக அவர் சேமித்து வைத்திருந்ததைக் கண்கூடாகப் பார்த்தேன்,” என்று உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.

“இதைப் போலத்தான், சிங்கப்பூர் அரசாங்கமும் வருங்காலத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களைச் சமாளிப்பதற்காக சேமித்து வைத்துள்ளது,” என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!